300 ஆண்டு மர்மம் விலகியது : 35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கம் கண்டுப்பிடிப்பு...

300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருக்கும் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொலம்பியா கண்டுபிடித்ததுள்ளது.
கடந்த 1708ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்ற போது ஸ்பெயின் கான்ஜோஸ் என்ற கப்பலில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பு கொண்டுச் செல்லப்பட்டது.
ஆனால் அக்கப்பலை கைப்பற்றி தன் வசமாக்க இங்கிலாந்து போரிட்டது. இதில் ஸ்பெயின் கப்பல் கொலம்பியாவில் உள்ள சரூபியன் கடலில் குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்டது.
அக்கப்பலை கண்டு பிடிப்பதில் கொலம்பியா தீவிரமாக ஈடுபட்டது. 1980ஆம் ஆண்டுகளில் சிதைந்த கப்பல் மூழ்கி கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த கப்பலில் தங்கம் மற்றும் வெள்ளி இருப்பதை கொலம்பியா நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். அதில் இருக்கும் புதையலின் மதிப்பு 35 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 300 ஆண்டு மர்மம் விலகி விட்டதாக கொலம்பியா அதிபர் ஜுவான் மானுவல் சான் டோஸ் அறிவித்துள்ளார்.
300 ஆண்டு மர்மம் விலகியது : 35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கம் கண்டுப்பிடிப்பு...
Reviewed by Author
on
December 07, 2015
Rating:
Reviewed by Author
on
December 07, 2015
Rating:

No comments:
Post a Comment