மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சீமேந்து பக்கற்றுகள் பயனாளிகளுக்கு மானியமாக வழங்கி வைப்பு.-Photos
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாச அவர்களின் வழி காட்டலின் கீழ் பூச்சு பூசாமல் காணப்படும் வீடுகளிற்கு 10 சீமேந்து பைகள் வழங்கி பூச்சு வேலையைப் பூர்த்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் 1000 வீடுகள் வீதம் நாடளாவிய ரீதியில் 25000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் இத்திட்டமானது நேற்று திங்கட்கிழமை(30) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை(30) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக முன்றலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் .எம்.வை.எம்.தேசப்பிரிய தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
-அதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மன்னார் பிரதேச செயலகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் சில பயனாளிகளிற்கு சீமேந்து பைகள் மானியமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்.று.சுவர்ணராஜா, முகாமையாளர், கணக்காளர், டோக்யோ சீமேன்ட் நிறுவன விற்பனை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சீமேந்து பக்கற்றுகள் பயனாளிகளுக்கு மானியமாக வழங்கி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
December 01, 2015
Rating:

No comments:
Post a Comment