அல் குர்ஆனை தடைசெய்ய வேண்டும்: பொதுபல சேனா
அல் குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதுகாக்க முடியும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இனவாதம் குறித்து கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வருவதன் ஊடாக இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அனைத்து இல்லங்களுக்கும் அல் குர்ஆனை விநியோகிக்க வேண்டி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இது குறித்து யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.
அத்துடன் அல் குர்ஆன் தொடர்பில் பகிரங்கமாக போதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதுவே இனவாதம் குறித்து கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தத்திற்கு தாம் வழங்கும் பதில் என கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
அல் குர்ஆனை தடைசெய்ய வேண்டும்: பொதுபல சேனா
Reviewed by Author
on
December 16, 2015
Rating:

No comments:
Post a Comment