அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பஸார் பகுதியில் உள்ள சந்தை கட்டிடத்தொகுதியில் கழிவுப்பொருட்களை கொட்டும் கழிவுத் தொட்டியை அமைத்து தருமாறு கோரிக்கை-படங்கள்


மன்னார் பஸார் பகுதியில் உள்ள நவீன சந்தை கட்டிடத்தொகுதியில் கழிவுப்பொருட்களை கொட்டுவதற்கான கழிவுத் தொட்டி ஒன்றை அமைத்துத் தருமாறு மன்னார் நகர சபையிடம் பல தடவை கோரிக்கை விடுத்த போதும் மன்னார் நகர சபை இது வரை கழிவுப்பொருட்களை கொட்டுவதற்கான தொட்டியை அமைத்துத் தரவில்லை என குறித்த சந்தையில் உள்ள வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள நவீன சந்தை கட்டிடத்தொகுதியில் பல்வேறு வகையான வியாபார நிலையங்கள் அமைந்தள்ளது.

எனினும் குறித்த வியாபார நிலையங்களில் உள்ள கழிவுப்பொருட்களை கொட்டுவதற்கான கழிவுத்தொட்டி அமைக்கப்படவில்லை.

-எனினும் தேங்குகின்ற கழிவுப்பொருட்கள் அருகில் கொட்டப்படுகின்றமையினால் கழுதை மற்றும் மாடுகள் அப்பகுதிக்கு வந்து அவ்விடத்தை நாஸப்படுத்தி வருகின்றது.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் நகர சபையை மக்களின் பிரதிநிதிகள் ஆட்சி செய்த காலம் தொட்டு நகர சபை கலைக்கப்பட்டு இன்று வரை நகர சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தும் கழிவுப்பொருட்களை கொட்ட தொட்டி அமைத்து தரவில்லை.
இதனால் அப்பகுதி வர்த்தகர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

சில நேரங்களில் அவ்விடத்தில் கழிவுகளை கொட்டும் வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் மன்னார் நகர சபைக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் இது வரை கழிவுகளை கொட்ட தொட்டி அமைக்கப்படவில்லை.

-தற்போது மன்னார் நகர சபையினால் பண்டிகைக்காலங்களுக்கான வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் நகர சபை பல இலட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.

எனவே குறித்த வருமானத்தில் கிடைக்கப்பெற்றுள்ள பணத்தின் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி குறித்த சந்தை தொகுதிக்கு கழிவுப்பொருட்களை கொட்டும் கழிவுத் தொட்டியை அமைத்துத்தருமாறு வர்த்தகர்கள் மன்னார் நகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.








மன்னார் பஸார் பகுதியில் உள்ள சந்தை கட்டிடத்தொகுதியில் கழிவுப்பொருட்களை கொட்டும் கழிவுத் தொட்டியை அமைத்து தருமாறு கோரிக்கை-படங்கள் Reviewed by NEWMANNAR on December 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.