சுதந்திரமாக கிறிஸ்துமஸ் ஷொப்பிங் செய்த பிரித்தானிய இளவரசி: வெளியான புகைப்படங்கள்...
எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவதற்கு பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் சுதந்திரமாக வெளியே சென்று ஷொப்பிங் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலை நாடுகளில் உற்சாகமாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை முக்கியமானதாகும்.
இந்த பண்டிகையை கொண்டாட சில வாரங்களுக்கு முன்னதாகவே பொதுமக்கள் ஷொப்பிங் செய்வது வழக்கமானதாக இருந்தாலும், இது அரச குடும்பத்து இளவரசியையும் பொது இடத்திற்கு வெளியேற வைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று Chelsea பகுதியை சிறிது பரபரப்பாக காணப்பட்டுள்ளது. இதற்கு காரணம், ஷொப்பிங் செய்வதற்காக கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாமல் கேட் மிடில்டன் வீதிகளில் வலம் வந்தது தான்.
இதே பகுதியில் உள்ள பீட்டர் ஜோன்ஸ் என்ற ஆடம்பர வர்த்தக நிறுவனத்திற்குள் சென்ற அவர் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
வெளியே வரும்போது, வெள்ளை நிற கைப்பை முழுவதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தன்னுடைய இரண்டு வயது மகன் ஜோர்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லோட் ஆகியோருக்கு பரிசு பொருட்களை வாங்கியதாக தெரிகிறது.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நடமாடும் அந்த வீதியில் திடீரென பிரித்தானிய இளவரசி காரில் இருந்து இறங்கி வந்து மக்களோடு மக்களாக நடந்து சென்றது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சுதந்திரமாக கிறிஸ்துமஸ் ஷொப்பிங் செய்த பிரித்தானிய இளவரசி: வெளியான புகைப்படங்கள்...
Reviewed by Author
on
December 13, 2015
Rating:

No comments:
Post a Comment