கெய்ல் மீண்டும் டெஸ் போட்டிக்கு...
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 சதங்கள், 37 அரை சதங்களுடன் 7214 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இதில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 333 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவர் தனது முதுகுப் பகுதியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ஆனால், ஐ.பி.எல்., பிக் பாஷ் போன்ற லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.
கெய்ல் சொந்த நாட்டு அணிக்காக விளையாடுவதை விட பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருபதுக்கு 20 லீக்கில் மட்டுமே விளையாட விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.
இந்நிலையில்,எனக்கு பணம் முக்கியமல்ல, எனது நாட்டு அணிதான் முக்கியம். ஆகவே, டெஸ்டில் மோசமாக விளையாடி வரும் அணியை காப்பாற்றுவதற்காக மீண்டும் அணி க்கு திரும்பும் எண் ணம் உள்ளது” என்று கெய்ல் கூறியுள்ளார்.
கெய்ல் மீண்டும் டெஸ் போட்டிக்கு...
Reviewed by Author
on
December 16, 2015
Rating:

No comments:
Post a Comment