முன்மாதிரியான ஒப்பந்தக்காரர்களை பாராட்ட - வடக்கு போக்குவரத்து அமைச்சர்...

முழங்காவில் பிரதான பேரூந்து நிலையத்துக்கு 12-12-2015 சனிக்கிழமை மாலை நேரில் விஜயம் செய்த வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள், பேரூந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, கடந்த 19-05-2015 அன்று முழங்காவில் மக்களுக்கு வாக்களிக்கப்பட்டு இடம் தெரிவு செய்யப்பட்டு, 18-09-2015 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிர்மானப்பணிகள் ஏறத்தாள 90 வீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அங்கு பார்வையிட்டபின்னர் தமது கருத்தை தெரிவித்த அமைச்சர், இலாப நோக்கோடு செயப்பட்டாலும், இவர்கள் போன்ற முன்மாதிரியான ஒப்பந்தக்காரர்கள் எமது மாகாணத்தின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுடயவர்களாக இருக்கின்றமையால் தாம் இவர்களை பாராட்டுவது தமது கடமை எனவும், இதே போன்று மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து ஒப்பந்தகாரர்களும் தாம் எடுக்கின்ற வேலைகளில் இலாபத்தை மட்டும் நோக்காது நமது மாகாணத்தின் மக்களுக்கு ஒரு சேவையாகவும் எண்ணி பணிகளில் ஈடுபட்டால் விரைவில் எமது வடக்கு மாகாணம் முன்னேற்றம் அடையும் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்தார்.
முன்மாதிரியான ஒப்பந்தக்காரர்களை பாராட்ட - வடக்கு போக்குவரத்து அமைச்சர்...
Reviewed by Author
on
December 13, 2015
Rating:

No comments:
Post a Comment