அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்கள் முசலி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை-படங்கள்


முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள், பலசரக்கு கடைகள் போன்றவற்றை முசலி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஒஸ்மன் சாள்ஸ் தலைமையிலான குழவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

பொது சுகாதார பரிசோதகர்கள், உணவு ;மருந்து பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது வர்த்தகர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. மற்றும் சுகாதாரத்திற்கு கேடான முறையில் இயங்கிய வெதுப்பகம் ஒன்றும் , உணவகம் ஒன்றும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத்துக்கு உகந்த முறையில் இயங்குவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்; குறித்த உணவகம் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு அவற்றை திருத்தி அமைக்க அவர்களுக்கு கால அவகாசங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்கள் முசலி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை-படங்கள் Reviewed by NEWMANNAR on December 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.