அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இந்திய மீனவரின் 'ஜனாசா' மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மையவாடியில் அடக்கம்.(படங்கள் இணைப்பு)


தலைமன்னார் கடற்பரப்பில் மீட்கப்பட்ட காணாமல் போன இந்திய மீனவர் ஒருவரின் ஜனாசா இன்று செவ்வாய்க்கிழமை(15) மாலை மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடற்தொழிலுக்குச் சென்ற போது கடந்த 29 ஆம் திகதி முதல் காணாமல் பேயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த மீனவர்களை தொடர்ச்சியாக தேடி வந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி (4-12-2015) இரவு தலைமன்னார் கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.

தலைமன்னார் கடற்படையினரின் உதவியுடன் குறித்த சடலம் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சடலத்தின் கை பகுதியில் 'எச்.றுபினா' என பச்சை குத்தப்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தினூடாக குறித்த தகவல் இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டதோடு சடலமாக மீட்கப்பட்ட மீனவரின் புகைப்படமும் அங்கு அனுப்பி வைக்கப்பட்ட போது குறித்த சடலம் காணாமல் போன 4 இந்திய மீனவர்களின் ஒருவரான ராமேஸ்வரம் ராமநாதபுரம் சல்லி மலை கிராமத்தைச் சேர்ந்த யாகீர் ஹீசைன்(வயது-40) என் அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சடலம் இந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் நீண்ட நாட்கலாக மன்னார் பொது வைத்தியசாலையில் பிரதே அரையில் வைக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த மீனவர் ஒரு முஸ்ஸீம் மதத்தைச் சேர்ந்தவர் எனபதனால் அவரது ஜனாசா முஸ்ஸீம் மதத்தின் முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என இந்திய துணைத்தூதுவர் என்.நடராஜன் மன்னார் மாவட்ட மீனவ சமாசத்தின் தலைவர் என்.எம்.ஆலம் ஆவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் மன்னார் உப்புக்களம் பள்ளி பரிபாலகர் சபையூடாக குறித்த இந்திய மீனவரின் ஜனாசா இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் உப்புக்குளம் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு உப்புக்குளம் முஸ்ஸீம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் போது உப்புக்குளம் கிராம மக்கள்,இந்திய துணைத்தூதுவ அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் என பலர் இருதிச்சடங்கில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.












தலைமன்னார் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இந்திய மீனவரின் 'ஜனாசா' மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மையவாடியில் அடக்கம்.(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on December 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.