தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிவில் சமூகம்
தமிழ் பேசும் மக்களின் உரிமைகள், தேவைகள் அபிலாசைகள் மற்றும் அடிப்படை எதிர்பார்ப்புகளை வெளிக்கொணரவும் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவும்; சகல மாவட்டங்களிலும் இது தொடர்பில்
செயலாற்றுகின்ற சிவில் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து தேசிய மட்டத்தில்; ஓர் வலையமைப்பாக செயற்படுவதே
'தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிவில் சமூகம்' ஆகும்.
இதில் எவ்வித பாகுபாடுகளுமின்றி தமிழ், சிங்கள, முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் செயலாற்றுகின்றனர்.
பேரினவாத போக்கினை தவிர்த்துகொள்ள முடியாத இளைஞர்கள் காலத்திற்கு காலம் தமது எதிர்ப்பினை
மனக்குமுறல்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். பேரினவாத அரசியல் சமூகம் இலங்கை தேசம் முழுவதையும் பௌத்த
சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவேண்டும் என்கின்ற உறுதியான முடிவுகளும் அதன் தொடர்ச்சியான
அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் காலத்திற்கு காலம் தமிழ்பேசும் சிறுபான்மை மக்களை ஓர் உறுதியற்ற
நிலைக்கு தள்ளியிருக்கின்றது. இதன் ஓர் பிரதிபலிப்பே செந்தூரனின் மரணமும் ஆகும். பேரினவாத
செயற்பாடுகளே இந்த இளைஞனின் இந்த முடிவுக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. இதற்கு சம்மந்தபட்ட சகலரையும்
தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சிவில் சமூகம் வன்மையாக கண்டிக்கின்றது. எமது சிவில்
சமூகமானது இவ்விளைஞரின்; உணர்வை மற்றும் தியாகத்தை மதித்து கௌரவிக்கின்றது. இவ்விளைஞனின் மரணம்
தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுடன் பொறிக்கப்பட ஓர் சான்றாகும். ஆனாலும் இளைஞர்கள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்துகின்ற இவ்வாறான அணுகுமுறை எவ்வகையிலும் பொருத்தமற்றதொன்றாகும். இதனைஒருபோதும் எவரும் எதற்காகவும் ஊக்குவிக்க கூடாது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்மந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும். அரசியல் கைதிகளின் பிரச்சனை அரசியல் சார்ந்தோ அல்லது சட்டம் சார்ந்தோ இருப்பதாக காட்டப்பட்டாலும் அது தொடர் அடக்குமுறையின் வருவிளைவே என்பதை நாம்ஏற்றுக் கொள்கின்றோம்.
இவ்வாறான சம்பவங்களுக்கு இன்னும் அரசியல் ரீதியில் தீர்வு காணப்படாத
இனப்பிரச்சினையே காரணமாகும்.
இனப் பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவரவேண்டுமாயின் முரண்பாட்டிற்கான உண்மையான தோற்றுவாய்களை அல்லது ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட சூழ்நிலைகளை நினைவுகூர்ந்து சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை
பூர்த்திசெய்ய வேண்டும் என்ற ஓர் அவசர அறைகூவலையே இம்மரணம் உறுதிப்படுத்துகின்றது. சிறுபான்மை
சமூகத்தினர் ஆரம்பத்தில்; தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக அகிம்சை போராட்டங்களை முன்னெடுத்தபோது
அவ் போராட்டங்கள்; அதே அடக்குமுறைகளாலும் ஒடுக்குமுறைகளாலும் நசுக்கப்பட்டதன் விளைவாகவே இந்த தீவுக்குள்
ஆயுத போராட்டம் ஆரம்பமானது. இந்த ஆயுத போராட்டமும் 35 ஆண்டுகளை கடந்து தாங்கமுடியாத பல்வோறான
அழிவுகளையும் துயரங்களையும் தந்து கடந்த 2009 நடுப்பகுதியோடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆயினும்
சிறுபான்மை மக்கள் மீதான ஆயுதமற்ற யுத்தம்; தொடரவே செய்கிறது. இவர்களின் மனித உரிமைகள், அடிப்படை
உரிமைகள், தேவைகள் மற்றும் அபிலாசைகள் மீதான அடக்குமுறையான ஒடுக்குமுறையான யுத்தம் முடிவுக்கு
கொண்டுவரப்படவில்லை. ஆயுத யுத்தத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இந்த
சூழ்நிலையில் ஏமாற்றமும் விரக்தியும் சிறுபான்மை சமூகத்திறகுள்; மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
இது மேலும் மேலும் இளைஞர்களை விரக்தி நிலைக்கு தள்ளுவதோடு தவறான முடிவுகளை தூண்டுவிக்கிறது. தம் தலைமைகள்
மீதும் சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை வைத்து நீதி கிடைக்காத தமிழ்பேசும் மக்கள் சமூக இளைஞர்கள் தமக்கான
நீதி வேண்டி யாரிடம் செல்வது என்று புரியாது நிற்கின்றனர். அவர்களின் உள்ளக்குமுறல்களை
வெளிப்படுத்துவதற்கான ஓர் இடைவெளி காணப்படாததன் காரணமாகவே இளைஞர்கள் தமது நீதிக்கான போராட்டங்களில்
செந்தூரனை போன்று தவறான முடிவுகளை எடுக்க தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் இவர்கள் இல்லை.
செந்தூரனின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிப்பதாலோ இரங்கல் செய்தி விடுவதாலோ இந்த இளைஞனின்
உள்ளகுமுறல்களுக்கு நீதி கிடைத்துவிடப்போவதில்லை. சம்மந்தப்பட்ட சகல தரப்பினரும் இந்த சந்தர்ப்பத்தில் இதனை
உணர்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதுவே எமது சமூகம் மரணித்த செந்தூரனுக்கு அளிக்கும்
மரியாதையும் கௌரவமும் ஆகும்.
சிறுபான்மை சமூகத்தின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதற்கான ஓர் இடைவெளி இளைஞர்களுக்கு அவசியமானது
என்பதை தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிவில் சமூகம் நன்கு உணர்ந்து இதற்கான கதவுகளை
திறந்தே வைத்திருக்கிறது. தமிழ்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறைகொண்டுள்ள இளைஞர்கள்
அரசியல், இன மத பேதமின்றி எம்மோடு இணைந்து இதற்கான களமாக இதனை பயன்படுத்தமுடியும்.
நன்றி
தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சிவில் சமூகம்
28, கைலாசபிள்ளையார் கோவில் ஒழுங்கை
நாவலர் வீதி
யாழ்ப்பாணம்
ஊடக அறிக்கை

Reviewed by NEWMANNAR
on
December 04, 2015
Rating:
No comments:
Post a Comment