அண்மைய செய்திகள்

recent
-

துண்டிக்கப்பட்ட மன்னார் புகையிரத பிரதான வீதி சீர்செய்யப்படாததால் மக்கள் விசனம்

மன்னார் புகையிரத பிரதான வீதி சாந்திபுரம் பகுதியில் துண்டிக்கப்பட்டுள்தால் சாந்திபுரம், சவுத்பார் ஆகிய கிராம மக்கள் மற்றும் புகையிரத பயணிகள் பாதீக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் புகையிரத பயணிகள் உட்பட அப்பகுதி கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் நாடு பூராகவும் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தை அடுத்து மன்னாரில் ஏற்பட்ட கனமழை காரணமாக மன்னாரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியிருந்தது.

மன்னார் நகர பகுதியில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல கிராமங்களிலும், அதேபோன்று சிறுகுளங்கள் உட்பட குட்டைகள், ஓடைகள் என வெள்ளம் நிறைந்து வழிந்தோடியது.

இதனால் ஏற்பட்ட வெள்ளம் பெருமளவில் எமில்நகர் சதுப்புநில பகுதியில் தேங்கியிருந்தது.

தேங்கிய நீரை கடலுக்கு அனுப்புவதில் புகையிரத பிரதான பாதையில் அமைந்துள்ள சிறியரக பாலம் சாந்திபுரம் கிராமத்திற்கும் கடல்பகுதியையும் ஊடறுத்து செல்வதால் சாந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட சிறியரக பாலத்தின் குழாய் மூலமே வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் வெள்ளநீர் அதிகமாக காணப்பட்டதால் குறித்த வீதிக்கு அடியில் குறுக்காக அமைக்கப்பட்டிருந்த குழாயால் வெள்ள நீர் கடலுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து குறித்த குழாயினை அகற்றி புகையிரத வீதி துண்டிக்கப்பட்டது.

இதனால் அதிகமாக வெள்ள நீர் கடலுக்கு அனுப்பப்பட்டது. எனினும் மழை குறைவடைந்து இரு வாரங்கள் ஆகியும் குறித்த துண்டிக்கப்பட்ட சிறியரக பாலம் சீர் செய்யப்படாததால் மக்கள் வெளியிடங்களுக்கு செல்வதிலும் அதேபோன்று புகையிரத நிலையத்திற்கு செல்வதிலும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வீதி துண்டிக்கப்பட்டுள்தால் வாகனங்கள் வேறு வழியாகவே சென்று வருகிறது. இதனால் ஏற்படும் சிரமங்களை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் சம்பந்தமாக சம்பந்தபட்ட அதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, காலநிலை மாற்றம் இன்னும் சீராகவில்லை என்ற வகையில் குறித்த பாலம் சீர்செய்யப்படுவது தாமதபடுத்தப்படுள்ளதாக தெரிவித்ததுடன் விரைவில் அது சீர் செய்யப்படும் என பெயர் குறிப்பிட விரும்பாத சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் தற்காலிக பாலம் ஒன்றை அமைத்து தரும்படி குறித்த மக்கள் கோரியுள்ளனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குறித்த சிறிய ரக பாலத்தை சீர்செய்து தரும்படி வேண்டுகோள் விடுக்கின்றனர்.

துண்டிக்கப்பட்ட மன்னார் புகையிரத பிரதான வீதி சீர்செய்யப்படாததால் மக்கள் விசனம் Reviewed by NEWMANNAR on December 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.