அண்மைய செய்திகள்

recent
-

மகிந்த கொழுக்கட்டை! மைத்திரி மோதகம்:சாள்ஸ் நிமலநாதன்


மகிந்த அரசு கொழுக்கட்டை என்றால் மைத்திரி அரசு மோதகம். கொழுக்கட்டையை உருட்டமுடியாது. ஆனால் மோதகத்தை உருட்டலாம். இரண்டிலும் உள்ளே இருப்பது ஒரே விடயம்தான். ஜனாதிபதி பிரதமர் கூட்டாட்சி ராஜபக்ச குடும்பத்தை வெளியேற்றினார்களே ஒழிய, அதே இனவாத கொள்கையுடன்தான் செயற்பாடடு வருகிறது இவ்வாறு தெரிவித்துள்ளார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் அவர்கள்
கடந்த 26ம் திகதி வரவுசெலவு திட்ட நிவாதத்தில் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் வரவுசெலவு திட்ட விவாதத்தில் நாடாளுமன்றில் மேலும் தெரிவிக்கையில்

இந்த வரவு செலவுத்திட்டத்தில் எமது வடக்கு கிழக்கு மக்கள்
ஏமாற்றப்பட்டுள்ளார்களே! என்பது எனது கருத்து. நீண்ட கால யுத்தத்தால்
துன்பங்களை அனுபவித்த எமது மக்கள் இந்த அரசாங்கத்திடம் இரண்டு  விடயத்தை எதிர்பார்க்கின்றார்கள்.
1.   கௌரவமான வாழ்க்கை,

2.   வாழ்க்கைச் செலவைக் குறைத்தல்.

எமது மக்கள் ஜனவரி 8ம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்காக பெரிதும் நம்பிக்கையுடன் உழைத்தார்கள். ஆனால் இன்று ஏமாற்றம் அடைந்துபோய் இருக்கிறார்கள். மகிந்த அரசு கொழுக்கட்டை என்றால,; மைத்திரி அரசு மோதகம். கொழுக்கட்டையை உருட்டமுடியாது. ஆனால் மோதகத்தை உருட்டலாம். ஊள்ளே இருப்பது ஒரே விடயம்தான்.
ஜனாதிபதி பிரதமர் கூட்டாட்சி ராஜபக்ச குடும்பத்தை வெளியேற்றினீர்களே ஒழிய, அதே இனவாத கொள்கையுடன்தான் செயற்பாட்டில் இருக்கிறது.
அரசியல கைதிகள் புதிய அரசை நம்பியிருந்தார்கள், எங்களை விடுதலை செய்வார்கள் என்று. ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் புதிய அரசிற்கு உண்ணாவிரதம் இருந்து கோரிக்கை விட்டார்கள.; ஜனாதிபதி உறுதியளித்தார் 7ம் திகதிக்கு முன்பு எல்லோரையும் விடுதலை செய்வதாக. ஆனால் அப்போது 31 பேரை கடும்பிணையில் விடுவதாக அறிவித்தார்கள். ஆனால் அதில் 6 பேர் தென் பகுதியைச்சேர்ந்த போதை வஸ்துடன் தொடர்புடையவர்கள். அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம் இருந்தபோது மீண்டும் உறுதியளித்தார் எல்லோருக்கும் புனர்வாழ்வு அளிப்பதாக. இப்போது 20 பேருக்கு புனர்வாழ்வு என்று சொன்னார்கள.; ஆனால் அவர்களுக்கு புனர்வாழ்வு செல்ல சட்டச்சிக்கல் உள்ளது.
சரத்பொன்சேகா, சிராணி பண்டார நாயக்கா ஆகிகோருக்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தினார். ஆனால் அரசியல் தைதிகள் விடயத்தில் பாராபட்சம் காட்டுகிறார். அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் அரசியல் தலைவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். யுத்தத்தை கட்ளையிட்டு நடத்திய கருணாவிற்கு அமைச்சுப்பதவியும,; சுதந்திரக்கட்சியில் உயர் பதவியும், பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியும் கொடுத்து சேர் என்று சலூட் அடித்தவர்கள் நீங்களே! 12,000 புலிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்து விடுதலை செய்தது மகிந்த அரசு. ஏன் 200 அரசியல் கைதிகள் விடயத்தில் உங்கள் அரசியலை நடத்துகிறீர்கள்? உங்களிடம் தயவாகக்கேட்டுக்கொள்கிறேன், அரசியல் கைதிகள் விடயத்தில் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று சொல்லவில்லை குற்றத்திற்குமேல் தண்டனை அனுபவித்து விட்டார்கள். அவர்களும் தங்கள் குடும்பங்களுடன் வாழ்வதற்கு இந்த சபையில் உள்ள அனைவரும் ஏகமனதாக ஏற்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தண்டணை வளங்கப்பட்டிருப்பவர்களுக்கு குறுகியகால புனர்வாழ்வு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று இந்த அரசையும,; இந்த சபையில் உள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
எமது பிரதேசங்களில் அரசாங்க அதிபராக தகுதியுடைய தமிழர்கள் இருந்தும் சிங்கள அரசாங்க அதிபர்களே இருக்கின்றார்கள். அவர்கள் மாற்றலாகி செல்லும் போது தமிழ் அரச அதிபர்களை நியமிப்பதாக பிரதமர் எமது கட்சிக்கு உறுதியளித்தார். ஆனால் வவுனியாவில் என்ன நடந்தது? உங்கள் உறுதி மொழி எங்கே?  இந்த சிறிய விடயத்தில் உங்களால் உறுதிமொழியை காப்பாற்ற முடியவில்லை. நீங்கள் எப்படி எங்கள் மக்களுக்கு எதிர்பார்க்கும் வாழ்க்கையை கொடுக்க முடியும்? நீங்கள் உறுதி வழங்கிய மாதிரி அரசாங்க அதிபரை மாற்றித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
புதிய அரசு தேர்தல் முடிந்தபின் அறிவித்தது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவி தேர்தல் மாவட்டங்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று. வன்னியில் வெற்றிபெற்ற கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு. ஆனால் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவர் கடந்த ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்து, மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவராக இருந்து தற்போதைய ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள அமைச்சர் றிசாட் பதியுதினுக்கு வழங்கப்பட்டது. எங்கே உங்கள் ஜனனாயகம்? மக்கள் ஆணைக்குழுக்கு உங்கள் மதிப்பு என்ன? மகிந்த அரசிற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?  கடந்த ஆட்சியில் அவர் கொள்ளையடித்த பணத்திற்கு இந்த அரசு அடிமையா?
ஜெனிவா தீர்மானத்தை, பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் எமது கட்சி புதிய அரசின்மீது நம்பிக்கை வைத்து ஏற்றுக்கொண்டது. மனித உரிமைப்பேரவையில் வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாத சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்தார். எங்கே உங்கள் உறுதி? இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 4578 பேரின் முறைப்பாடு என்னிடம் உள்ளது. அவர்களுக்கு இந்த அரசு என்ன பதில் வழங்க போகிறது?  இவர்களுள் நேரடியாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களும் அடங்குவர் இவர்களுக்கு நல்ல தீர்வை இந்த அரசு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் தற்போது வறுமையில் உள்ளார்கள். பிள்ளையைத்தொலைத்த அம்மாவும், கணவனைத் தொலைத்த மனைவியும கண்ணீர் விட்டு அலைந்து திரிகின்றார்கள். அவர்களுக்கு தற்போதைய வரவு செலவுத்திட்டத்தில் சுயதொழில் செய்து அவர்களின் தற்போதைய வறுமையைப்போக்க குறைந்தது ரூபா 200,000 வழங்க முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
எமது மீனவர்களைப்பொறுத்தவரையில் இந்த வரவு செலவுத்திட்டத்தில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் வலை தொடர்ந்து வழங்கபபடுமா?  ஏன்று இந்த சபையில் விளக்கமளிக்க வேண்டும் என்று கேகட்டுக்கொள்கிறேன். எமது பிரதேசங்களில் நடைமுறையில் இருக்கும் வலை மானியம் சரியாக வழங்கப்படுவதில்லை. சில வேளைகளில் பணமாக வழங்கப்படுவதாக (35000 ரூபா) முறையிடுகிறார்கள். ஆதன் பெறுமதி 11,2000ரூபா இந்த வலை பல மீனவர்களுக்கு அமைச்சிலிருந்து வரவில்லை என்று திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றார்கள். இதை சரியான முறையில் மீனவர்களுக்குக்கிடைக்க உறுதியளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
தற்போது எமது பிரதேசங்களில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்பகுதி மீனவர்கள் தடைப்பட்ட தொழிலை செய்து வருகிறாhகள.; ஆட்சியில் இருக்கும் கடற்தொழில் அமைச்சர்கள் தங்களின் தொகுதியைச்சேர்ந்த மீனவர்களை இப்படிப்பட்ட தொழிலை செய்ய அனுமதிக்கிறார்கள.; எமது மீனவர்கள் எமது கடலில் மீன் பிடிக்க முடியவில்ல. முல்லைத்தீவு மாவட்த்தில் யுத்தத்திற்குப்பின் முல்லைத்தீவு மக்களுக்கு இருந்த கரவலைப்பாடு எப்படி தென்பகுதி மீனவர்களுக்கு மாறியது. முல்லைத்தீவு மாவட்த்திற்கு தற்போதைய கடற்தொழில் அமைச்சர் நேரில் விஜயம் செய்து எமது மீனவர்களை சந்தித்து அவர்களின் உரிமையை பெற்றுக்கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வரவு செலவுத்திட்த்தில் மன்னாரிலும் முல்லைத்தீவிலும் மீனவர்களின் இறங்கு துறைமுகம் அமைக்கப்படவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் அரச ஊழியர்களுக்கு ரூபா 10,000 அதிகரிப்பதாக கூறி, அவர்களை ஏமாற்றி வாக்குப்பெற்றீர்கள.; இப்போது கூறுகிறீர்கள் 5வருடத்திற்குள் அதிகரிப்போம் என்று. நீங்கள் அரச ஊழியர்களை ஏமாற்றாமல் வருடம் 2000 ரூபா வீதம் அதிகரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வடக்கு கிழக்கில் யுத்த காலத்தில் இராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் கடமையாற்றிய அரச ஊழியர்கள் பல இன்னல்களை அனுபவித்தார்கள். அவர்கள் போக்குவரத்திற்கு அதிக பணம் செலவிட்டார்கள.; அதிக விலை கொடுத்து அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்தார்கள.; பயத்தின் மத்தியில் சேவையாற்றியுள்ளார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கள.; இவர்களுக்கு விசேட திட்டமொன்றை அமுல்படுத்தி அவர்களை கௌரவிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
வடக்கு கிழக்கில் அரச திணைக்களங்களில் இருக்கும் வெற்றிடத்திற்கு அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும.; தற்போது எமது பகுதியிலிருக்கும் நியமனங்களுக்கு தென்பகுதியில் இருந்து மாற்றலாகி வருகின்றார்கள். தென்பகுதிக்கு அந்தந்த மாவட்டங்களில் நியமனம் வழங்குகிறார்கள். இதனால் எமது மாவட்டங்களில் இளைஞர் யுவதிகள் தகுதி இருந்தும் வேலையில்லாமல்  உள்ளார்கள். இது மாறவேண்டும். வுpவசாயிகளைப்பொறுத்தவரையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள வெள்ளைச்சம்பா, சிகப்புச்சம்பா, கீரிச்சம்பா 50ரூபாவிற்கும், சிகப்புநாடு, வெள்ளை நாடு, 45ரூபாவிற்கும் அரசு கொள்வனவு செய்துகொண்டிருக்கிறது. ஆனால் வரவு செலவு திட்டத்தில் நெல் கொள்வனவின் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிதாக மாற்றம் எதுவும் செய்யாமல் நடைமுறையில் இருக்கும் நிர்ணகிக்கப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யவேண்டுமென்றும், தற்பொழுது நெல்லின் கொள்வனவு 2000முப ஆகவுள்ளது. இதை 3000முப ஆக கொள்வனவு செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது 2 கெக்டேயர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதை ஒரு கெக்டேயராக இந்த அரசு குறைத்துள்ளது. இதில் உர மானியம் 25,000 ரூபா உட்படவென்று குறிக்கப்பட்டுள்ளது. இதில் ரூபா 25,000 ரூபாவா? ஆல்லது அதற்கு உட்பட்ட தொகையா? என்று இந்த சபையில் விளக்கம் அழிக்கப்படவேண்டும். மானியமாக பணம் வழங்கப்பட்டால,; அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் விவசாயிகளுக்கும் உரம் கிடைப்பதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும.; எல்லா யு.P.ஊ யிலும் விவசாயிகளுக்கு உரம் கட்டுப்பாட்டு விலையில் வழங்கினால் வரவேற்கத்தக்கது. இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மன்னார், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 2016ம் ஆண்டு 20,000 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் யுத்தத்தால் பாதிக்கப்பட் மக்களுக்கு வழங்கப்படுமா? என்று சந்தேகம் உள்ளது. எமது பிரதேசங்களில் வழங்கப்பட்ட இந்தியன் வீட்டுத்திட்த்தில் பல மோசடிகள் நடந்தன. அமைச்சரின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டு பிரதேச செயலாளர்களுக்கு உண்மையில் வறியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு தங்களின் அடியாட்களின் பெயர்கள்  இணைக்கப்பட்டது. இது போன்று நடக்காமல் உண்மையில் வீடு இல்லாதவர்களுக்கு இத்திட்டம் கிடைக்கவேண்டும். பாகிஸ்தான,; அரபு நாடுகளிலிருந்து கிடைக்கும் வீட்டுத்திட்டம் முற்றுமுழுதாக முஸ்லிம் மக்களுக்கே கிடைக்கின்றது. ஆனால் அமைச்சருக்கு பிடிக்காத சில முஸ்லிம் சகோதரர்களுக்கு இன்னும் வீடு  கிடைக்கவில்லை. இத்திட்டமானது வறியவர்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கும். பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கும், யுத்தத்தால் அங்கவீனர்களான குடும்பத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன். ஒரு வீடு எவ்வளவு பெறுமதியில் கட்டிக்கொடுக்கப்படுமென்று இந்த சபையில் விளக்கமளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
உள்ளூர் விமான நிலையங்களில வடக்கு கிழக்கு முற்றாக புறக்கணிக்கபட்பட்டுள்ளது. பலாலி விமான நிலயம் இதில் புறக்கணிக்கப்பட்டது எமக்கு சந்தேகத்தை அழிக்கிறது. பலாலி விமான நிலையம் மக்கள் போக்குவரத்துக்கு விடப்பட்டால,; அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும.; மக்களுக்கும் போக்குவரத்து இலகுவாக இருக்கும்.  புலம் பெயர் நாடுகளில் இருக்கும் எமது உறவுகள் இலகுவாக பயணங்களை மேற்பொள்ள முடியும். பலாலி விமான நலையம் இத்திட்டத்தில் சேர்க்கப்படாமை ஏன் என்பதை இந்த அரசு விளக்கமளிக்க வேண்டும்.
காங்கேசன் துறையில் உள்ள சீமெந்து தொழிற்சாலை, வாழைச்சேனையில் உள்ள கடதாசி தொழிற்சாலைகளை புனரமைப்புச்செய்து இத் தொழிற்சாலைகளை இயக்கினால,; குறைந்தது 5000ம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதையும் இந்த சபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.  நீங்கள் அமைக்கவிருக்கும் விமான நிலையங்கள்  மாத்தறை விமான நிலையம் போல் நெல் களஞ்சிய சாலைகளாகவோ அல்லது அமைச்சர்களின் போக்குவரத்திற்குத்தான் பயன்படும.; இந்த நாட்டிற்கோ மக்களுக்கோ எந்தவித பயனும் கிடைக்காது. உங்கள் ஆட்சியில் கட்டப்பட்டால் அந்த விமான நிலையங்களுக்கு   உங்களது பெயரிடலாம். மற்றும்படி அதனால் ஒரு பயனும் இல்லை.
கல்விக்கு அதிக பணம் ஒதுக்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இந்த தொகையில் எவ்வளவு வடகிழக்கிற்கு வழங்கப்படும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் இன்னமும் புணரமைப்பு செய்யப்படவில்லை. எமது பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடம், கணணி அறைகள் போதுமானதாக இல்லை. எமது பிரதேசத்தில் இன்னமும் ஓலைக்கொட்டிலில்தான் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.

இந்த நிலை மாற வேண்டும். எமது பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறையே காணப்படுகின்றது. ஓப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஆசிரியர்களை நிரந்தரமாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வடகிழக்கிற்கு தேவையான நிதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்
மகிந்த கொழுக்கட்டை! மைத்திரி மோதகம்:சாள்ஸ் நிமலநாதன் Reviewed by NEWMANNAR on December 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.