19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடர் காலிறுதிக்கு இலங்கை அணி தகுதி...
19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக் கெட் அணியானது, 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணியை 33 ஓட்டங்களால் வெற்றிகொண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
பங்களாதேஷில் தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட உல கக் கிண்ணத் தொடரின் குழு "பீ" க்கான போட்டியில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியும் ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியும் நேற்றைய தினம் மோதிக்கொண்டன.
சில்லெட் சர்வதேச கிரிக்கெட் அரங் கில் நடைபெற்ற இப்போட்டியில் இல ங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மா னித்தது. இதன்படி ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய கவீன் பண்டார, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
இவர்கள் இருவரும் முதல் விக்கெட் 8.1 ஓவர்களில் 48 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில், அவிஷ்க பெர்னாண்டோ 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கவீன்
பண்டார 20 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதன் பின்னர் வந்த துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், அணித்தலைவர் சரித் அசல ங்க, வனிந்து அசரங்க ஜோடி நிதான மாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை அணியின்
மொத்த ஓட்ட எண் ணிக்கையை அதிகரித்தனர். இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டுக்காக 62 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது. 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டு களையும் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தனிமனிதனாக போராடிய அணித்
தலைவர் அசலங்க பெறுமதிமிக்க 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ் தான் அணி சார்பில் சம்சூர் ரஹ்மான் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
185 ஓட்டங்களை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடுவதற்காக ஆப்கானிஸ் தான் அணி சார்பில் நவீட் ஓபெய்ட்டுடன் கரீம் ஜெனத் களமிறங்கினார். அவ்வணி 15 ஓட்டங்களை பெற்றவேளையில் தனது முதல் விக்கெட்டை இழந்தது.
எனினும் ஆப்கான் வீரர்கள் இலங்கை அணிக்கு சற்று சவால் அளிக்கும் விதத் தில் துடுப்பெடுத்தாடியிருந்த போதிலும், இலங்கை அணியினரின் நேர்த்தியான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பின் காரண மாக ஆப்கான் அணி சற்று தடுமாற்ற த்தை எதிர்கொண்டது.
இறுதியில் 44. 5 ஓவர்களில் ஆப்கானி ஸ்தான் அணியினர் 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந் தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளை யும் அணித்தலைவர் அசலங்க, அசித்த பெர்னாண்டோ தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக, 19 வயதுக்குட்பட்ட இல ங்கை அணி தனது முதலாவது போட்டி யில்
19 வயதுக்குட்பட்ட கனடா அணியை எதிர்த்தாடியிருந்தது. இப்போ ட்டியில் இலங்கை அணி 196 ஓட்டங்க ளால் வெற்றி பெற்றது.
ஆப்கானுடனான வெற்றியின் மூலம் குழு பீக்கான புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் (நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில்) முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதன்படி குழு "பீ"க்கான முதல் இடத்தை தீர்மானிக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி மிர்பூரில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில் நேற்றைய தினம் மேலும் 3 போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய அணி நியூஸிலாந்து அணியையும், நேபாளம் அணி அயர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி கனடா அணியையும் வெற்றி பெற்றன.
ஹெற்றிக் சாதனை
நேபாளம் மற்றும் அயர்லாந்து அணி களுக்கிடையிலான போட்டியில் நேபாளம் கிரிக்கெட் அணி வீரரான சந்தீப்
லமிச்சான் அடுத்தடுத்து மூன்று விக்கெட் டுகளை கைப்பற்றி ஹெற்றிக் சாதனை புரிந்தார்.
ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் ஹெற்றிக் சாதனை புரிந்தமை இது ஐந்தாவது சந் தர்ப்பமாகும்.
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடர் காலிறுதிக்கு இலங்கை அணி தகுதி...
Reviewed by Author
on
January 31, 2016
Rating:

No comments:
Post a Comment