அண்மைய செய்திகள்

recent
-

84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர்


இங்கிலாந்து பத்திரிகை அதிபர் 84 வயது முர் டோக் தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை 4-வது திருமணம் செய்கிறார்.

இங்கிலாந்தின் பிரபல மான ஒரு பத்திரிகையின் அதிபர் ரூபெர்ட் முர்டோக். இவருக்கு வயது 84. இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர். இவரது 3-வது மனைவி வெண்டி டெங் (46). இவர் மூலம் கிரேஸ் (14), சொலோக் (12) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவரை கடந்த 2013-ம் ஆண்டு முர்டோக் விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில் முர்டோக் ஜெர்ரி ஹால் என்ற 59 வயது நடிகையும், முன்னாள் மாடல் அழகியின் காதல் வலையில் விழுந்தார். ஜெர்ரியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவருக்கு எலிசபெத், ஜேம்ஸ், ஜார்ஜியா மற்றும் காபிரியல் ஜாக்கர் என்ற 4 குழந்தைகள் உள்ளனர்.
முர்டோக்-ஜெர்ரி ஹால்  ஜோடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ஆஸ்திரேலியா சென்று காதல் வானில் சிறகடித்து பறந்த இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதை தொடர்ந்து கடந்த வாரம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.இந்நிலையில், காதல் ஜோடி சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 73-வதுகோல்டன் குளோப் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
ரூபெர்ட் முர்டோக்கின் முதல் மனைவி பாட்ரிகா புக்கர், 2-வது மனைவி அன்ன போர்ல், 3-வது மனைவியின் பெயர் வெண்டி டெங், முர்டோக்கின் மூத்த மகன் லாசெலான். இவருக்கு 44 வயது ஆகிறது.



84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர் Reviewed by Author on January 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.