அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் “தழிழ் சிங்கள மாணவ கலை இலக்கிய ஆக்கத்திறன் போட்டி -2016”


“மொழி உரிமையும் மனித நேயமும்”

சர்வதேச தாய் மொழிகள் தினத்தினை முன்னிட்டு சமதானத்திற்கான உதயம் நிறுவனம் மாவட்ட பிரஜைகள் சபை ஒன்றியமும்  இணைந்து  நடாத்தும்..

“தழிழ்
சிங்கள மாணவ கலை இலக்கிய ஆக்கத்திறன் போட்டி -2016” இப்போட்டியானது மன்னார் மாவட்டத்தினை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் திறந்த வெளிபோட்டியாளர்களின் (20 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
“உங்கள் தாய்மொழி உங்களுக்கு இனிமையானது உங்களை பாதுகாக்கின்றது அது உங்களுக்கு போதனை வழங்குகின்றது  உங்களுக்கு அதன் மீதுள்ள முக்கியத்துவத்தினை போன்றே ஏனைய மொழிகளை பேசுவோருக்கும் அது பொதுவானதே”

போட்டி விபரங்கள்

•    கவிதை  
•    கட்டுரை
•    சிறுகதை
•    ஓவிய ஆக்கம்

கவிதை-நாட்டார் பாடல்-ஓவியம் போன்ற ஆக்கத்திறன் போட்டிக்கு நீங்கள் விரும்பிய தலைப்பின் கீழ் ஆக்கங்களை வடிவமைக்க முடியும்.ஆனால் கட்டுரை போட்டிக்கு மாத்திரம் நாங்கள் வழங்கியுள்ள தலைப்பின் கீழ் ஆக்கங்களை முன்வைக்கப்பட வேண்டும்.

    கட்டுரை போட்டிக்கான தலைப்புகள்.

 01. மொழி உரிமைக்கு மதிப்பளித்தலினுடாக சகவாழ்வை மதிக்கும்             சமூகத்தினை கட்டியெழுப்புதல்.
02.    மொழி உரிமை மற்றும் கலாசார பன்மைத்துவத்தை பாதுகாத்தல்.
03.    பிற மொழிக்கு மதிப்பளித்தலின் முக்கியத்துவம்.
04.    மொழி கலாசாரத்தின் விம்பமாகும்.

 போட்டிகள் இடம்பெறும் பிரிவுகளும்  போட்டி நிபந்தனைகளும்.


போட்டிகள்    பிரிவுகள்

    கீழ்பிரிவு

(06-09ம் ஆண்டு)
 கட்டுரை    250 - 300 சொற்கள்.
மேல் பிரிவு
(10-13ம் ஆண்டு)
கட்டுரை  400 - 500சொற்கள்.

 திறந்த வெளி பரிவு
(20 வயதுக்கு உட்பட்டவர்கள்)
   400 - 500 சொற்கள்.

02    கவிதை    சுதந்திரமாக ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்.
         (நிபந்தனைகள் அற்றது)
03    சிறுகதை   
04    ஓவிய ஆக்கம்    14 *18 அங்குலம்

   போட்டிக்கான நிபந்தனைகள்...
01.    ஒருவர் அனைத்து போட்டிகளிலும் பங்கு கொள்ள முடியும்.
02.    A4 தாளில் ஒரு பக்கத்தில் மாத்திரம் உங்களது ஆக்கங்களை எழுதவேண்டும். (கவிதை---கட்டுரை---சிறுகதை)
03.    மேலே கூறப்பட்டுள்ள பிரிவுகளின் அடிப்படையில் சொற்களை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். (கட்டுரை)
04.    ஒருவர் ஒரு போட்டியின் ஒரு ஆக்கத்தினை மாத்திரம் முன்வைக்க வேண்டும்.

   ஓவியப் போட்டி
1.    தாங்கள் விரும்பிய தலைப்புகளை பயன்படுத்தலாம்.
2.    தங்களுக்கு உகந்த வர்ணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
3.    வெள்ளை நிறம் கொண்ட வரைவுத்தாளை பயன்படுத்தல் வேண்டும்.
4.    வரைவுத்தாள் 14 *18  அங்குலம் அளவு கொண்ட தாளினை பயன்படுத்த வேண்டும்.
5.    உங்களது ஆக்கங்கள் முழுமையாக பூரணப்படுத்தப்பட்டதாகவும்  நீர் வர்ணங்களை பயன்படுத்துவோர் நன்கு உலர்ந்தபின் அனுப்பப்படல் வேண்டும்.
    பாடசாலை மாணவர்களாயின் உங்களது ஆக்கங்கள்அனைத்தும் தங்களது பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
    திறந்த வெளி போட்டியாளர்கள் எனின் கிராம உத்தியோகஸ்தர்- சமாதான நீதவான்-மதகுரு மூலம் உறுதிப்படுத்தி சமர்ப்பித்தல் அவசியம்.

    அனைத்து போட்டிகளின் ஆக்கங்களும் 30-01-2016 ம் திகதிக்கு முன்னதாக கிடைக்க கூடியவாறு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

அனைத்து போட்டிகளின் ஆக்கங்களும் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில்
 “தழிழ்  சிங்கள மாணவ கலை இலக்கிய ஆக்கத்திறன் போட்டி -2016”  எனக்குறிப்பிட்டு போட்டியின் தலைப்பினையும்கட்டாயம் குறிப்பிடல் வேண்டும்.
    மேலும் 21-02-2016 அன்று மு.ப. 9.00 - 12.30 மணி வரை பலவித கலைநிகழ்ச்சிகள் ஊடான இலக்கிய செயலமர்வும்  நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் மாலை கலை இலக்கிய ஆற்றல் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி வைக்கப்படும்.

(இடம் பின்னர் அறிவிக்கப்படும்.)

மேலதிக தகவல்கள் மற்றும் ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
கருத்திட்ட உத்தியோகஸ்தர் சமாதானத்திற்கான புதிய உதயம்
  4/67 பெரியகமம். மன்னார்.
தொலைபேசி இலக்கம் :-
 திரு. எ. எமில் றொமில்டன் 077 2028556
 திரு. அ.கில்லறி கூஞ்ஞ 0772351421

“நாம் மொழி உரிமையை மதிப்போம்”
மன்னார் “தழிழ் சிங்கள மாணவ கலை இலக்கிய ஆக்கத்திறன் போட்டி -2016” Reviewed by Author on January 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.