கண்ணீர் சிந்திய ஒபாமாவால் பரபரப்பில் உலகம்!

துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும் போது அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கி சூட்டினால் பலியாகியுள்ளனர்.
எனவே இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிபர் ஒபாமா பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2012ஆம் ஆண்டும் நியூடவுன் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலியானார்கள்.
அந்த குழந்தைகளை பற்றி நினைக்கும்போது எல்லாம் எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது என்று கூறிய அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டே, சிக்காக்கோ பகுதியில் இது போன்ற சம்பவம் தினமும் நடைபெறுகிறது என்று கூறினார்.
இந்நிலையில், துப்பாக்கிகளுக்கு கட்டுபாடு விதிக்கும் மசோதோவை நாடாளுமன்றம் தடுப்பதாக கூறப்படுகிறது.
எனவே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற அனுமதியில்லாமலேயே துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர ஒபாமா முடிவு செய்துள்ளதாக மிகவும் ஆதங்கத்துடன் கருத்துரைத்தார்.
இவ் வேளை சபையினர் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் சிந்தியமை உலகில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
காரணம் உலகத் தலைவர்கள் பலர் பொது நிகழ்வுகளில் கண்ணீர் சிந்தினாலும் அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் சிந்தியமை பல தரப்பினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
கண்ணீர் சிந்திய ஒபாமாவால் பரபரப்பில் உலகம்!
Reviewed by Author
on
January 06, 2016
Rating:
Reviewed by Author
on
January 06, 2016
Rating:

No comments:
Post a Comment