அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆங்கில ஆசிரியர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இறப்பு…



மன்னாரில் இன்று காலை 06-01-2016 மன்னார் பொது விளையாட்டரங்கிற்கு முன்னாள் மலர்ச்சாலை அருகில் 150 இலக்கமுடைய வீட்டில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பி-யூட் கோடிஸ்வரன் எனும் ஆங்கில ஆசிரியர் இறந்துள்ளார் இவர் சின்னக்கடையை வசிப்பிடமாகவும் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார்.

பி-யூட் கோடிஸ்வரன் எனும் நபர் கல்யாணமாகி ஒரு பிள்ளையின் தந்தையாவார் இவரது குடும்பம் கனடாவில் வசித்து வருவதாகவும் 08 வருடங்களாக இவருக்கு வீசா மறுக்கப்பட்ட நிலையிலேயே இவர் இவ்வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து கொண்டு ஆங்கில கவ்வியினை போதித்து வந்ததார் இந்நிலையிலே இந்த இறப்பு நடந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வீசாரனையை மேற்கொண்டு வேளை மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியும் மன்னார் மாவட்ட நீதவான் ஏ-ஐp-அலெக்ஸ் ராஐh பார்வையிட்டதுடன் மேலதிக பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தடவியல் நிபுணர் குழு மோப்பநாயுடன் வந்து விசாரனை பரிசோதனை மேற்கொண்ட போதும் தற்கொலையா கொலையா என்னும் சரியான தீர்வு கிடைக்கப்பெறவில்லை….






















மன்னாரில் ஆங்கில ஆசிரியர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இறப்பு… Reviewed by Author on January 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.