மன்னாரில் பாரிய திருட்டு சம்பவம் பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில்…
மன்னார் எழுத்தூர் கிராம அலுவலகர் பிரிவுக்குற்பட்ட வீடு ஒன்றினுள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் உள்ளே சென்ற கொள்ளையர்கள் வீட்டில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை,பணம் மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த முருங்கன் பாடசாலையின் ஆசிரியரான நிவீன் பெணாண்டோ (வயது-47) என்பவரது வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
ஆசிரியர் நிவீன் பொணாண்டோ மற்றும் அவருடைய மனைவி,தந்தை,மற்றும் மூன்று பிள்ளைகள் சம்பவ தினமான இன்று(22) வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த வீட்டில் ஆழ்ந்த நித்திரையில் காணப்பட்டுள்ளனர்.
இதன் போது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வீட்டின் பின் புறமாக வந்த கொள்ளையர்கள் வீட்டின் மீது ஏறி ஓட்டை கலட்டிக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
வீட்டின் உள்ளே மூன்று கொள்ளையர்கள் சென்றுள்ளனர்.
இவர்களில் இருவர் முகத்தை துணியினால் மறைத்தவாறும்,ஒருவர் முகத்திற்கு எதுவும் கட்டாதவாறும் சென்றுள்ளனர்.
வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் ஆழ்ந்த நித்திரையில் காணப்பட்ட ஆசிரியர் நிவீன் பெணாண்டோ(வயது-47) அவரின் தந்தையான அலசியஸ் பெணாண்டோ(வயது-83) மற்றும் ஆசிரியர் நிவீன் பெணாண்டோவின் மனைவியான ஆசிரியர் இதயமலர்(வயது-43) ஆகியோர் மீது தடிகளினால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதன் போது ஆசிரியரின் தந்தையான அலசியஸ் பெணாண்டோ(வயது-83) என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய கொள்ளையர்கள் அவரை கட்டிலில் கட்டி வைத்த பின் ஆசிரியர்கலான கணவன்,மனைவி ஆகிய இருவரையும் கண் மூடித்தனமாக தாக்கிய நிலையில் அவர்களை அச்சுரூத்தி அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததோடு பெறுமதியான கையடக்கத்தொலை பேசிகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஆனால் 3 பிள்ளைகளுக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
கொள்ளையர்கள் தப்பிச் சென்ற நிலையில் காணமடைந்த ஆசிரியர் அபாயக்குரல் எழுப்பிய நிலையில் அயலவர்கள் குறித்த வீட்டிற்குச் சென்ற போது இறத்த வெள்ளத்தில் காணப்பட்ட குறித்த மூவரையும் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.குறித்த மூவருடைய தலை மற்றும் உடற்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக ஆசிரியரான இதய மலர் (வயது-43) யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம் பெற்ற வீட்டிற்கு விரைந்து வந்த பொலிஸார் தடயங்களை பார்வையிட்டதோடு மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பாரிய திருட்டு சம்பவம் பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில்…
Reviewed by Author
on
January 22, 2016
Rating:
No comments:
Post a Comment