அண்மைய செய்திகள்

recent
-

ரணிலின் கருத்தால் ஆவேசமடைந்த சம்பந்தன்...


காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் குறித்தே தாம் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் நாட்டிற்கு வருகைத் தருகின்ற அனைத்து சர்வதேச பிரதிநிதிகளிடமும் கலந்துரையாடல்களை நடாத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் விடயம் குறித்து தாம் மிகுந்த வருத்தமடைவதாகவும், அதற்கான முடிவொன்று விரைவில் எட்டப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை முக்கிய பிரச்சினையாக கருத்திற் கொண்டு, விரைவில் பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வட மாகாண விஜயத்தின் போது அவரால் வெளியிடப்பட்ட கருத்து, காணாமல் போனோரின் பிரச்சினைக்கு முடிவாக அமையாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் கருத்தால் ஆவேசமடைந்த சம்பந்தன்... Reviewed by Author on January 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.