அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தன் தலைமைத்துவத்தை பலப்படுத்துவோம் முதலமைச்சர் சீ.வி....


அரசியல் தீர்வு தொடர்பில் ஒருமித்து செயற்படுவோம். நாங்கள் மக்கள் அபிப்பிராயத்தை பெறுவோம். எல்லோருமாக சேர்ந்து கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய உழைப்போம். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் காலை 10 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட ஏனையோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் நாம் வடக்கு மாகாணத்துக்கு தெரிவாகி 3 வருடங்களாகிறது. இந்த 3வருடங்களில் நாங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்கள் அதிகமானவை.

மாகாண சபைக்குள்ளே ஒரு செயலைப் புரிவதற்கு மத்திய அரசாங்கம் எவ்வளவு தூரம் தடையாக இருந்து வருகிறது என்பதை நாங்கள் அனுபவங்கள் ஊடாக கண்டு கொண்டோம்.

ஆகவே மாகாணங்களுடைய அதிகாரம் என்பது பகிரப்பட முடியாததாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலே நாங்கள் திடசங்கற்பமாக உள்ளோம். சம காலத்திலே கிராம இராச்சியங்கள் என்ற போர்வையில் அதிகாரத்தை மாகாணசபையிடமிருந்து பிரித்தெடுப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது.

இந்த விடயத்திலே இன்று கூடியிருந்தவர்கள் எல்லோரும் தெரிவித்தது போல அரசியல் தீர்வு தொடர்பில் ஒருமித்து செயற்படுவோம். நாங்கள் மக்கள் அபிப்பிராயத்தை பெறுவோம். கருத்துக்கள் கலந்தாய்வுகளை மேற்கொள்வோம். அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். தீர்வு யோசனைகளை தொகுத்து கட்சி  தலைமையிடம் கையளிப்போம்.

இங்கு சம்பந்தன் அவர்கள் தீர்வு யோசனை தொடர்பில் தெளிவான விளக்கத்தை அளித்தார். ஆகவே எல்லோருமாக சேர்ந்து கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய உழைப்போம். என்றார்.


சம்பந்தன் தலைமைத்துவத்தை பலப்படுத்துவோம் முதலமைச்சர் சீ.வி.... Reviewed by Author on January 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.