மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக ஜோசப்கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை நியமனம்
மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம் இன்று 14-01-2016 மாலை ஆயர் இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அவர்களாள் அறிவிக்கப்பட்டது.
திருச்சபைச்சட்ட எண் 401 பகுதி 1இற்கு அமைவாக மன்னார் ஆயர் அதிவந்தனைக்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பதவி துறப்பை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் அறிவித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்பட்டு பொறுப்பை ஏற்கும் வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப்கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமித்துள்ளார் இந்த நியமனம் தை மாதம் 14ஆம் திகதி வத்திக்கான் நேரம் நண்பகல் 12-00மணிக்கும் இலங்கை நேரம் மாலை 4-30 மணியில் இருந்து உத்தியோக பூர்வமாக அமுலுக்கு வருகின்றது.
ஊடகவியளாளலர் சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்ரர்சோசை அருட்தந்தை அவர்களும் அருட்தந்தை ஏ.ஜெ.முரளிதரன் செயலாளர் அருட்தந்தை எஸ்.இராயநாயகம் நிதியாளர் அருட்தந்தை பி.கிறிஸ்த்து நேசரெட்ணம் மறைமாவட்ட ஊடக இணைப்பாளர் உடன் மன்னார் மாவட்ட ஊடகவியளாலர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பாரிய முயற்சியினால் பல கெடுபிடியான சூழ்நிலைகளிற்கு மத்தியிலும் அயராத சேவையாற்றிய 23 வருடங்களுக்கு மேலாக தனது அருட்பணியை செவ்வனே செய்து 75வது அகவைதனில் சகயீனம் காரணமாக தனது பொறுப்பை துறைந்து இறைவாழ்வில் இணைத்துள்ளார்.
ஆயர் அவர்களின் உடல் நிலை மிகவும் நல்ல நிலையில் தான் உள்ளது ஆயர் அவர்களின் பணியினை குருக்கள் துறவியர் பொதுநிலையினர் அனைவரும் பாரட்டி மகிழ்வதோடு இறைவனிடம் வேண்டி நிற்கிறோம் அதே வேளை எம் மறைமாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்று அப்போஸ்தலிக்க பரிபாலகராக அதிவந்தனைக்குரிய ஜோசப்கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவதோடு அவரின் மறைபணிக்கு மன்னார் மறைமாவட்ட குருக்கள் துறவியர் பொதுநிலையினர் அனைவரும் மனதார ஏற்றுக்கொள்வோம்.
இன்று மாலை 5-30 மணியளவில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்து தனது பொறுப்பில் மறைமாவட்டத்தை அப்போஸ்தலிக்க மடலை வாசித்வுடன் அப்போஸ்தலிக்க பரிபாலகராக அதிவந்தனைக்குரியஜோசப்கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை உத்தியாகபூர்வமாக ஏற்றுக்கொள்வார்.
மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக ஜோசப்கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை நியமனம்
Reviewed by Author
on
January 14, 2016
Rating:
No comments:
Post a Comment