யாழ். பொங்கல் விழாவில் கலந்துகொள்வது எனக்கு கௌரவம் : நாட்டில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது....
எல்லோரையும் போலவே, நானும் தைப்பொங்கலுக்காக ஆர்வத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் காத்திருக்கின்றேன். ஆனால் இந்த வருடம் இலங்கைக்கான புதிய அத்தியாய ஆரம்பத்தின் தருணமாக இவ்வருடம் கொண்டாடப்படவிருக்கின்றது. இதற்காக, ஆசியவுக்கான ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானியா) அமைச்சர் என்ற வகையில் மூன்றாவது விஜயமாக இலங்கை வருகிறேன். கடந்த 12 மாதங்களில் நாடு கடந்து வந்த பாதை என்னை அதிசயிக்க வைத்துள்ளது. இன்று, பெரும்பாலான இலங்கையர்களும், அனைத்து இன பிரிவினரும் ஒன்றிணைந்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன் கற்பனை செய்ததைவிட பிரகாசமான எதிர்காலத்தை நோக்குவதை நான் பார்க்கின்றேன் என பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தனது இலங்கை விஜயம் தொடர்பில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் மாற்றத்தை காணும் பொருட்டு ஜனாதிபதி சிறிசேனாவை தெரிவு செய்து சிறிது காலத்தின் பின்னர் நான் கடந்த விஜயத்தை மேற்கொண்டேன். முக்கியமாக மூன்று விடயங்களால் ஊக்குவிக்கப்பட்டு ஈர்க்கப்பட்டேன்.
இதில் முதலாவதாக, இதுவரை நாட்டில் பல வருடங்களாக நிழலாக காணப்படும் புரையோடிப்போன இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பு, இரண்டாவதாக, ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்கு அவசியமான சோதனைகள் மற்றும் சமநிலைகளை மீள கட்டியெழுப்பதற்கான அரசாங்கத்தின் ஆர்வம், மூன்றாவதாக, பல வருடகால கசப்பான உறவின் பின்னர் தமது பழங்கால தோழர்களுடனான உறவு புத்துயிர் அளித்தல் என்பனவற்றை கூற முடியும்.
யாழ். பொங்கல் விழாவில் கலந்துகொள்வது எனக்கு கௌரவம் : நாட்டில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது....
Reviewed by Author
on
January 14, 2016
Rating:

No comments:
Post a Comment