மன்/கீரிச்சுட்டான் அ.த.க.பாடசாலைக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரிக்கை-வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன்.
மன்-கீரிச்சுட்டான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்,உடனடியாக குறித்த பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி மடு வலயக்கல்விப் பணிப்பாளரிடம் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஜீ.குணசீலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்-கீரிச்சுட்டான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான வகுப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.குறித்த பாடசாலையில் அதிபர் ஒருவர் மாத்திரமே நிரந்தரமாக கடமையாற்றி வருவதாகவும் ஆசிரியர்கள் இல்லை எனவும் பெற்றோர் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
தொண்டர் ஆசிரியர்கலாக கடமையாற்றியவர்கள் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு சென்றுள்ளனர். மேலும் குறித்த பாடசாலைக்கு நியமிக்கப்படுகின்ற ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாகவும் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
-இதனால் குறித்த பாடசாலையில் தற்போது ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை எடுக்கும் மாணவர்களுக்கு கூட கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உடனடியாக குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு மடு வலயக்கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
-குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மடு வலயக்கல்விப் பணிப்பாளர் குறித்த பாடசாலைக்கு நேரடியாகச் சென்று பிரச்சினைகளை கேட்டறிவதாகவும், தற்காலிகமாக சில ஆசிரியர்களை உடன் குறித்த பாடசாலைக்கு நியமனம் செய்வதாகவும், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி பெறச் சென்றவர்கள் பயிற்சி முடிவில் திரும்பியவுடன் குறித்த பாடசாலைக்கு நிறந்தர ஆசிரியர்களை நியமிப்பதாக மடு வலயக்கல்விப்பணிப்பாளர் உறுதியளித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
மன்/கீரிச்சுட்டான் அ.த.க.பாடசாலைக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரிக்கை-வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன்.
Reviewed by NEWMANNAR
on
January 05, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 05, 2016
Rating:


No comments:
Post a Comment