மன்னார் மக்களின் பணத்தை ஏமாற்றி பெற்றுக்கொண்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற பெண்-பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
மன்னார் நகர் பகுதியில் உள்ள பல இடங்களில் வீடு வாடகைக்கு வேண்டி சிறிய அறைக்கும் ஆலை ஒன்றை நடத்தி வந்த குடும்பப்பெண் ஒருவர் மன்னார் மக்களை ஏமாற்றி சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிச் சென்ற சம்பவம் ஒன்று மன்னாரில் அண்மையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த பெண்ணால் பாதிக்கப்பட்ட பலர் மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
-மன்னார் உப்புக்களம், புதுத்தெரு பிரதான வீதியை வதிவிடமாக கொண்ட குடும்ப பெண் ஒருவர் பல இலட்சம் ரூபாய் பணத்துடன் இந்தியாவிற்கு கடந்த வாரம் தப்பிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புறிந்து வரும் நிலையில் குறித்த பெண் மன்னாரில் பல இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.
வீட்டுடன் கூடிய சிறிய அரிசி அறைக்கும் ஆலையை நடத்தி வந்த நிலையில் பலர் குறித்த பெண்ணிற்கு அறிமுகமாக இருந்தனர்.
இந்த நிலையில் குறித்த பெண் சீட்டு பிடித்தல் , வட்டிக்கு பணம் வாங்குதல் மற்றும் நகைளை தேவைக்காக வேண்டுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
-நீண்டகாலமாக குறித்த பெண் மக்களுடன் அன்புடனும் பன்பாகவும் நற்புறவை ஏற்படுத்தி வந்த நிலையில் இறுதி நேரத்தில் பழகிய உறவினர்களை ஏமாற்ற தொடங்கியுள்ளார்.
-கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் பலரிடம் கடனாக பணத்தைப் பெற்றக்கொண்டுள்ளார்.
-அத்துடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளையும் வேண்டியுள்ளார். அது மட்டுமின்றி குழு அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் கடன்களையும் பெற்றுள்ளார்.
-குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில்புரிந்து வரும் நிலையில் குறித்த பெண்ணின் கணவரின் நம்பிக்கையில் அடிப்படையில் பலர் இவ்வாறு பணத்தை வழங்கியுள்ளனர்.
-வணிதா என அழைக்கப்படும் இரு பிள்ளைகளின் குறித்த தாய் மன்னார் நகர் பகுதியில் உள்ள பல வீடுகளில் வருடா வருடம் வாடகைக்கு இருந்துள்ளார்.
-இத்தோடு தான் வாடகைக்க உள்ள வீடுகளில் சுய தொழிளாக சிறிய அறைக்கும் ஆலையை நடத்தி வந்தள்ளார்.இதன் காரணமாகவே பலர் இவருக்கு அறிமுகமாகியுள்ளனர்.
-இந்த நிலையில் இருதியாக மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பிரதான வீதியில் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுக்கொண்ட குறித்த பெண் தனது இரு ஆண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மக்களை ஏமாற்றி பணம் நகை என சுமார் ஒரு கோடி ரூபாவிற்கு மேல் சுருட்டிக்கொண்டு தலை மறைவாகியுள்ளார்.
-குறித்த வணிதா என்ற பெண்ணினால் ஏமாற்றப்பட்ட பலர் மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
( மன்னார் நிருபர்)
(4-1-2016)

Reviewed by NEWMANNAR
on
January 05, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 05, 2016
Rating:

No comments:
Post a Comment