ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தொடர்பாக பிழையான செய்திகள் வெளிவருவது வேதனையளிக்கின்றது-ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை.
ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தொடர்பாக சில ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி முற்று முழுதாக தவறானது என மன்னார் ஆயர் இல்லத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஓய்வு பெற்ற ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை தெரிவித்துள்ளர்.
ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை அவர்கள் மரணித்து விட்டார் என வெளி வரும் செய்திக்கு மறுப்புத் தெரிவித்து அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகயீனமடைந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் நலமுடன் இருக்கின்றார்.
ஆனால் ஆயர் அவர்கள் மரணித்து விட்டதாக சில ஊடகங்களில் பிழையான செய்திகள் வெளி வந்து கொண்டுள்ளது.குறித்த செய்தியினை மன்னார் ஆயர் இல்லம் முற்று முழுதாக மறுக்கின்றது.
மன்னார் ஆயர் தொடர்பாக உண்மைக்கு புரம்பான செய்திகள் வெளி வருவது வேதனையளிக்கின்றது.
(மன்னார் நிருபர்)
(17-1-2016)
ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தொடர்பாக பிழையான செய்திகள் வெளிவருவது வேதனையளிக்கின்றது-ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை.
Reviewed by NEWMANNAR
on
January 17, 2016
Rating:
No comments:
Post a Comment