மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேசாலைக்கு விஜயம்
மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஓய்வு பெற்ற ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை இன்று காலை பேசாலை கிராமத்துக்கு சென்று புனித வெற்றி நாயகி ஆலயத்தில் முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவுற்ற நிலையில் அப்போஸ்தலிக்க பரிபாலகரர் ஓய்வு பெற்ற ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை அவர்கள் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய அருட்பணிப் பேரவை அங்கத்தவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் போது ஆன்மீகம், சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பில் பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை ஏ.சேமாலை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருப்பலி நிறைவுற்ற நிலையில் அப்போஸ்தலிக்க பரிபாலகரர் ஓய்வு பெற்ற ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை அவர்கள் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய அருட்பணிப் பேரவை அங்கத்தவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் போது ஆன்மீகம், சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பில் பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை ஏ.சேமாலை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேசாலைக்கு விஜயம்
Reviewed by NEWMANNAR
on
January 17, 2016
Rating:

No comments:
Post a Comment