மன்னார் மறைமாவட்டத்திலுள்ள துள்ளுக்குடியிருப்பு பாதுகாவளியாம் காணிக்கை மாதா ஆலய வருடாந்த திருவிழா -02-02-2016
மன்னார் மறைமாவட்டத்தின் கீழியன்குடியிருப்பு பங்கின் துள்ளுக்குடியிருப்பு கிராமத்தின் பாதுகாவளியாம் காணிக்கை மாதா ஆலய வருடாந்த திருவிழா செவ்வாய் கிழமை (02.02.2016) பங்குத்தந்தை அருட்பணி டெரன்ஸ் குலாஸ் அடிகளார் தலைமையில் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ் திருவிழா கூட்டுத்திருப்பலியை அருட்பணி எமில் எழில்ராஐ; அடிகளார் தலைமையில் போதகர் அருட்பணி சுரேன் (ஓ.எம்.ஐ) பங்குதந்தை அருட்பணி டெரன்ஸ் குலாஸ் ஆகிய அடிகளார்களால் ஒப்பக்கொடுக்கப்பட்டது.
விழா திருப்பலியைத் தொடர்ந்து ஆலய வளாகத்துக்குள் திருச்சுரூப பவனியும் இதைத்தொடர்ந்து பங்குதந்தையால் திருச்சுரூப அன்னையின் ஆசீரும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.விநோ வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி குணசீலன் முன்னாள் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் கொன்சால் குலாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
திருவிழா திருப்பலி ஆரம்பிப்பதற்கு முன் தலைமன்னார் மன்னார் பிரதான வீதிக்கு அருகாமையில் அதாவது அலயத்துக்கு முன்பாக காணிக்கை மாதா திருச்சுரூபம் ஸ்தாபிக்கப்பட்டதுடன் மெழுகுதிரி ஆசீர்வதிக்கப்பட்ட திருச்சடங்கும் இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள துள்ளுக்குடியிருப்பு பாதுகாவளியாம் காணிக்கை மாதா ஆலய வருடாந்த திருவிழா -02-02-2016
Reviewed by Author
on
February 03, 2016
Rating:
Reviewed by Author
on
February 03, 2016
Rating:










No comments:
Post a Comment