அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பன்னவெட்டுவான் பகுதியில் இன்று பாரிய விபத்து -06-02-2016


மன்னார் பிரதான வீதியில் முருங்கன் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பன்னவெட்டுவான் பகுதியில் இன்று 06-02௨016 காலை  06 மணிக்கும் 07 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பாரிய விபத்து நடைபெற்றுள்ளது.

விபத்தானது மட்டக்களப்பில் இருந்து மன்னாருக்கு மீன் கொள்வனவு செய்வதற்காக றெஜிபோம் பொட்டிகளுடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்தவேளை வாகன சாரதி சில நொடிகள் கண்ணயர்ந்துள்ளார் அந்நொடிப் பொழுதிலே எதிர்பாராத விதமாக வாகனமானது வீதியின் அருகில் இருந்த குளக்கட்டில் மோதிய வேகத்தில் 03 தடவைக்கு மேல் சுழன்று குளத்திற்குள் பாய்ந்துள்ளது.
வாகனசாரதிக்கு நெஞ்சுப்பகுதி மிகவும் பாதிப்பிற்கு உள்ளானதுடன் அவருக்கு துணையாக வந்தவருக்கும் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த முருங்கன் பொலிஸ்சார் விபத்துக்குள்ளான இருவரையும் மன்னார் பொதுவைத்தியசாலையில் சேர்த்ததோடு மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.







மன்னார் பன்னவெட்டுவான் பகுதியில் இன்று பாரிய விபத்து -06-02-2016 Reviewed by Author on February 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.