இராமேஸ்வர மீனவர்கள் 12 பேரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
தலை மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இராமேஸ்வர மீனவர்களையும் மேலும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்ககமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா இன்று (25) வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
-குறித்த 12 இராமேஸ்வர மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரனைகள் இன்று வியாழ்க்கிழமை மீண்டும் விசாரனைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா குறித்த 12 மீனவர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பினுள் கடந்த 10 ஆம் திகதி (10-02-2016) அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் 2 படகுகiளைச் சேர்ந்த 12 இராமேஸ்வரத்து மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின் கடந்த 11 ஆம் திகதி (11-2-2016) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
-இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை (இன்று வரை) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
-இந்த நிலையில் குறித்த 12 இராமேஸ்வரத்து மீனவர்களும் இரண்டாவது தடவையாக இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரனைக்காக அழைத்து வரப்பட்ட போதே மீண்டும் குறித்த 12 இராமேஸ்வரத்து மீனவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்ககமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(25-2-2016)

Reviewed by NEWMANNAR
on
February 25, 2016
Rating:
No comments:
Post a Comment