அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நாளை கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு.

பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படு கொலையை கண்டித்து மன்னாரில் நாளை(26) வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கோரியும்,இனி வரும் காலங்களில் இலங்கையின் காவல் துறையும் அதனுடன் இணைந்த ஏனைய சிவில் மற்றும் சமூக அமைப்புக்கள் எமது மக்களையும்,மாணவர்களையும், இளம் சிறார்களையும் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெறவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை மன்னார் பஸார் பகுதியில் இடம் பெறவுள்ளது.

-குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சகல தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


(மன்னார் நிருபர்)

(25-02-2016)

மன்னாரில் நாளை கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு. Reviewed by NEWMANNAR on February 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.