அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை படைத்த 4-வது திசரா பெரேரா ....


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்றிரவு அரங்கேறியது. இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் திசரா பெரேரா ஆட்டத்தின் 19-வது ஓவரில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங் ஆகியோரை தொடர்ச்சியாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை படைத்த 4-வது பவுலர் திசரா பெரேரா ஆவார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பிரெட்லீ (வங்காளதேசத்துக்கு எதிராக 2007-ம்ஆண்டு), நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம் (இலங்கை, 2009-ம்ஆண்டு), நியூசிலாந்தின் டிம் சவுதி (பாகிஸ்தானுக்கு எதிராக, 2010-ம் ஆண்டு) ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை படைத்த 4-வது திசரா பெரேரா .... Reviewed by Author on February 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.