பீஜிங்கில் நிலநடுக்கம்: இருவர் பலி, 34 பேர் படுகாயம்....
பீஜிங்கில் நேற்றுக் காலை 03:30 மணியளவில் 6.7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி நிலநடுக்கமானது, பீஜிங் கௌசிங் என்ற இடத்திலேயே இடம்பெற்றுள்ளது. இதனால் பாரிய சேதங்கள் இடம்பெற்றுள்ளன.
இரு சடலங்கள் மீட்கப்பட்டதுடன், இதுவரை 34 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து முற்றாக விழுந்துள்ளமையால் அதில் வசிக்கும் சுமார் 123 பேரின் நிலை இன்னும் வெளியாகவில்லை.
இதனடிப்படையில் மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், கன ரக இயந்திரங்களின் உதவி கொண்டு மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பீஜிங்கில் நிலநடுக்கம்: இருவர் பலி, 34 பேர் படுகாயம்....
Reviewed by Author
on
February 07, 2016
Rating:

No comments:
Post a Comment