நல்லிணக்க விவகாரங்கள் தொடர்பில் சந்திரிகா- சுஷ்மா இடையே பேச்சு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று முற்பகல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பணியகத்தின் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இலங்கையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாகவே சந்திரிகா குமாரதுங்கவும், சுஷ்மா சுவராஜும் பேச்சுக்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும், நீண்டகால நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்லிணக்க விவகாரங்கள் தொடர்பில் சந்திரிகா- சுஷ்மா இடையே பேச்சு
Reviewed by Author
on
February 07, 2016
Rating:

No comments:
Post a Comment