அண்மைய செய்திகள்

recent
-

கடமை நிறைவேற்று அதிபர்களுக்கான நிரந்தர நியமனம் இழுபறி நிலை…. மன்னார்மாவட்டத்தில் 60 அதிபர்களும் -மகஜர் இணைப்பு


கடமை நிறைவேற்று அதிபர்களுக்கான நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ளல்
தொடர்பாக அதிமேதகு ஐனாதிபதி மாண்புமிகு பிரதமர் கௌரவ கல்வி அமைச்சர் கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அத்தோடு பாதிப்புக்குள்னா அதிபர்கள் குழு நேரில் சென்றும் சந்திப்பது எனவும் தீர்மானம்…..

இச்சம்பவம் தொடர்பாக மேலும் அறியவருவது கடந்த மாதம அதிபர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையில் போதிய அளவு புள்ளிகளை பெறாதவர்கள் எனக்காரணம் காட்ட முற்படும் அதேவேளை கடமையில் இருக்கின்ற அதிபர்களுக்கு நேர்முகத்தேர்வு மூலம் அவர்களின் சேவைக்காலம்- பணியின் தன்மை -வயதெல்லை கல்வித்தரம் என்பனவற்றை கொண்டுதான் அதிபர்கள் தரப்படுத்தல் தான் இதுவரையில் உள்ள நடைமுறையாகும் தற்போது பரீட்சை முறை கொண்டுவரப்பட்டுள்ளது ஏற்க முடியாது என்கின்றனர் பாதிப்புக்குள்ளான அதிபர்கள்

 மன்னார் மற்றும் மடு சேர்ந்ததாக மன்னார்மாவட்டத்தில் 60 அதிபர்களும் வடக்கு மாகாணத்தில் 240 மேற்பட்ட அதிபர்களுமே பாதிப்புக்குள்ளானவர்கள் இதில் 3-6 வருடங்கள் சேவையாற்றிய அதிபர்கள் மற்றும் தேசிய பாடசாலை அதிபர்களும் அடங்குகின்றனர். ஏற்கனவே 6000 அதிபர்களுக்கான வெற்றிடம் இருக்கும் பட்சத்தில் ஏன் கடமையில் இருக்கும் அதிபர்களை நிரந்தர நியமனம் வழங்குவதில் இவ்வாறான இழுபறி நிலை….
இச்செயற்பாட்டினால் அதிபர்கள் உடல்  உள ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர், இதனால் மாணவர்களின் கல்வி நிலையிலும் பாடசாலைகளின் தரத்திலும் பின்னடைவுகள் ஏற்படும் எனவே சம்மந்தப்பட்ட கொளரவத்திற்குரிய அனைவரும் உடனடித்தீர்வை காணுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

கடமை நிறைவேற்று அதிபர்களுக்கான நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ளல்------

எமது நாட்டின் யுத்த சு10ழ்நிலைக் காலம் தொடர்ந்து சமாதானக்கால ஆரம்பம் தொட்டு பல்வேறு ஆபத்துக்கள்ää அச்சுறுத்தல்கள்ää கஷ்டங்கள்ää சுமைகள்ää வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் எமது சமூகத்தின் இருப்பிடத்தினையும்ää இளம் சமூகத்தின் கல்வியையும்ää எதிர்காலத்தினையும் கருத்தில் கொண்டு பலர் பின் நின்ற காலத்தில் எமது முஸ்லிம்ääதமிழ் பாடசாலைகளை சமூக உணர்வோடும்ää தத்துணிவுடனும்ää பொறுப்பேற்று பல சவால்களுக்கு முகம் கொடுத்து இப்பாடசாலைகளை வளர்த்து சாதனைகள் பல படைத்து வரும் மதிப்பிற்குரிய அதிபர்கள் அனைவரும் இன்று வரையில் கடமை நிறைவேற்று அதிபர்களாகவுள்ளதை முதலில் தங்களின் மேலான கவனத்திற்கு முன்வைக்க விரும்புகின்றோம்.

2012ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியாக இறுதியாக இடம் பெற்ற கடமைநிறைவேற்று அதிபர்களுக்காக (2013) விதிக்கப்பட்டிருந்த கால எல்லையானது 2008.01.01 முதல் மூன்று வருடகால சேவையை நிறைவேற்றியோர் என்ற நிபந்தனையின் கீழ் 2007.12..31இல் மூன்று வருடங்கள் சேவையை நிறைவேற்றியோர் மட்டும் நியமனத்திற்காக (2012 ஒக்டோபர்-டிசம்பர்) அழைக்கப்பட்டிருந்தனர். 2012 ஒக்டோபர்-டிசம்பரில் இடம்பெற்ற இந்த நியமனத்திற்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்ற போது மூன்று வருடங்களுக்கும் மேல் சேவையில்; இருந்த அதிபர்கள் பலர் 2008 ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் கடமைகளை பொறுப்பேற்றவர்களாக உள்ளபடியினால் நேர்முகப்பரீட்சை இடம் பெற்றபோது (2012ää2013) ஆண்டளவில் 4ää5 வருட சேவையில் இருந்தும் நேர்முகப்பரீட்சைக்கும் நியமனத்திற்கும் உள்வாங்கப்படாத நிலையில் இன்றுவரை கடமைநிறைவேற்று அதிபர்களாக சேவையாற்றிவருவதுடன்ää 2015ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் புதியவர்கள் கடமைநிறைவேற்று அதிபர்களாக நியமிக்கப்பட்டு பாடாசலைகளை நடாத்தி வருகின்றமையையும் தங்களுக்கு அறியத்தரவிரும்புகின்றோம்.

நியமனத்திற்காக கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட கால எல்லைகளை தமிழ்ää முஸ்லிம்களின் இடப்பெயர்வும் மீள்குடியேற்றமும்ää நல்லினக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள்ää நேர்முகப்பரீட்சை இடம் பெற்ற காலம்ää நியமனத்தின் போது வழங்கப்பட்ட முஸ்லிம்ääதமிழ் அதிபர்களின் எண்ணிக்கைää வீதாசாரம் என்பவற்றைக் கருத்தில் கொண்டும்ää மேலும் 2015ஆம் ஆண்டு புதிய அதிபர் தர பரீட்சையின் நிபந்தனைகளின் படி சிலர் வயது எல்லை உயர்வாகவும்ää பரீட்சைக்கு தோற்றாமலும்ää பெறுபேறுகள் சகலருக்கும் பாதகமாக அமைந்தமையினாலும். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதை வேதனையோடு அறியத்தருவதுடன்ää இது தொடர்பில் தங்களின் சிறந்த சிந்தனையையும் சாதக வழிகளையும் உற்படுத்தி இவ் அதிபர்களுக்கான நிரந்தர நியமனத்தினையும்ää அதிபர் சேவைத்தரத்தினையும் பெற்றுக்கொள்ள ஆவணம் செய்வீர்கள் எனவும் கடமை நிறைவேற்று அதிபர்கள் தங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையயில் தங்களிடம் முன்வைக்கும் இக்கோரிக்கைக்கு விரைவான நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை சகல அதிபர்களுக்கும் உள்ளதை தங்களுக்கு மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் தெரிவித்து சகல அதிபர்கள் சார்பான நன்றிகளையும் கூறி பணிவன்பாக இக்கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

-நன்றி-

இப்படிக்கு
உண்மையுள்ள


பிரதிகள்------
   
அதிமேதகு ஜனாதிபதி. ஜனாதிபதி செயலகம்-கொழும்பு

மாண்புமிகு பிரதமர்-பிரதமர்.செயலகம்-கொழும்பு

கௌரவ கல்வி அமைச்சர் செயலகம்ääகொழும்பு

கௌரவ முதலமைச்சர்-வடக்கு மாகாணம்
கௌரவ கல்வி அமைச்சர்-வடக்கு மாகாணம்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாணம்
கடமை நிறைவேற்று அதிபர்களுக்கான நிரந்தர நியமனம் இழுபறி நிலை…. மன்னார்மாவட்டத்தில் 60 அதிபர்களும் -மகஜர் இணைப்பு Reviewed by Author on February 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.