புலிகளுக்கு எதிரான முக்கிய 5 வழக்குகள்: ஏப்ரல் மாதத்துக்குள் தீர்ப்பு
பயங்கரவாத செயற்பாடுகள் குறித்த அனைத்து வழக்குகளையும் இந்தவருடத்தின் ஏபரல் மாத முடிவுக்குள் விசாரணை செய்து தீர்ப்புக்களை வழங்க அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி இதுகுறித்த தீர்மானத்தை இன்று அரிவித்தார்.
இதன்படியே புலிகள் அமைப்பில் இருந்த பலருக்கு எதிராக அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் மிக முக்கியமான 5 சம்பவங்கள் குறித்த வழக்குத் தீர்ப்பு இந்த வருடம் எப்ரல் மாதத்துக்குள் வழங்கப்படவுள்ளன.
அனுராதபுரம் விமானப்படை தளத்துக்கு வான் வழியூடாகவும் தரை வழியூடாகவும் ஒரே நேரத்தில் தாக்குதல் மேற்கொண்டு 16 போர் விமானங்களை நாசம் செய்து 400 கோடி ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதுடன் 14 பாதுகாப்பு படை வீரர்களை படுகொலை செய்தமை, வில்பத்து வனப் பிரதேசத்தில் இருந்து மிசைல் ஊடாக தாக்குதல் நடத்தி பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி பறந்துகொண்டிருந்த என்டனோ 32 என்ற விமானத்தை தலாவ, வீரவெவ பகுதியில் வீழ்த்தி 37 படையினரைக் கொன்றமை, இலங்கை கஜபா ரெஜிமேன்ட் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்த கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 பேரை வில்பத்து வனத்தில் வைத்து சுட்டும் வெட்டியும் படுகொலைச் செய்தமை, அனுராதபுரத்தில் வைத்து தற்கொலை குண்டுதாரி ஒருவர் ஊடாக மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேரை படுகொலைச் செய்தமை, கெப்பதிகொல்லாவ, யக்கா வெவ பகுதியில் பஸ் ஒன்றின் மீது கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி 68 சிவிலியன்களை கொலைசெய்தமை மேலும் 60 பேருக்கு காயம் ஏற்படுத்தியமை ஆகிய முக்கிய வழக்குகள் 5 இனதும் தீர்ப்புக்களே ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ளது.
புலிகளுக்கு எதிரான முக்கிய 5 வழக்குகள்: ஏப்ரல் மாதத்துக்குள் தீர்ப்பு
Reviewed by Author
on
February 25, 2016
Rating:
Reviewed by Author
on
February 25, 2016
Rating:


No comments:
Post a Comment