மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பேசாலை பங்கைச்சார்ந்த 67 இளைஞர் யுவதிகளுக்கு உறுதிப்பூசுதல்....(முழுமையான படங்களுடன்)
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பேசாலை பங்கைச்சார்ந்த 67 இளைஞர் யுவதிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கும் திருச்சடங்கு பேசாலை புனித வெற்றிநாயாகி ஆலயத்தில் இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரான மேதகு யோசேப்பு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன் பேசாலை பங்கு மற்றும் உதவிபங்கு அருட்பணியாளர்கள் செபமாலை, என்.பெயிலன் குரூஸ் அடிகளார்கள் இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
இளைஞர் யுவதிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தை ஆயர் யோசேப்பு கிங்சிலி சுவாம்பிள்ளை வழங்கியபின் அங்கு
மறையுரையாற்றுகையில் ....
நீங்கள் திருச்சபையின் உறுப்பினர்களாக இணைவதற்கு குழந்தை பருவத்தில் ஞானஸ்நானம் பெற்றீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் வளர்ந்தவர்களாக அன்று ஞானஸ்நானத்தில் பெற்ற உறுதிமொழியை உங்களுக்குள்ளே சிந்தித்தவர்களாக ஒரே சர்வேசுரனை விசுவசிக்கின்றேன் என்ற நம்பிக்கையுடனும் உறுதிப்பாட்டுடனும் இளைஞர்களாகிய நீங்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள்.
இன்று திருச்சபைக்கு ஒரு மகிழ்ச்சியான நாள் காரணம் நீங்கள் ஞானஸ்நானத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை இன்று புதுப்பித்து திருச்சபையில் பொறுப்புனர்வுடன் செயல்படுவது மட்டுமல்ல இவ் பங்கு மக்களுடன் இணைந்து செயல்படும் இளைஞர்களாக ஒன்றினைந்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அதுமட்டுமல்ல உங்கள் பெற்றோர் பங்குமக்கள் பங்குதந்தையர் மறையாசிரியர்கள் அணைவரும் மகிழ்வு கொள்கின்றனர். ஏனென்றால் நீங்கள் ஒரு பெருங்கொடைகளை அதாவது தூய ஆவியானவரின் கொடைகளை இந்த திருவருட்சாதனம் மூலம் பெறுகின்றீர்கள்.
முன்பு நீங்கள் ஊனக்கண்களால் பார்த்த விசுவாசத்தை இப்பொழுது உங்கள் ஞானக்கண்களால் பார்க்கும் விசுவாசிகளாக நீங்கள் மாற்றம் அடைந்துள்ளீர்கள். இதனால் விசுவாச வாழ்வோடு நீங்கள் வாழமுனையும்போது நீங்கள் கிறிஸ்துவின் அன்பை ஒருவர் ஒருவருடன் பகிர்ந்து கொள்வீர்கள்.
இந்த பரிசுத்த ஆவியின் கொடைகளால் நீங்கள் இறைவார்த்தைகளை பறைசாற்றவும் ஒருவர் ஒருவருக்கு அன்பு செய்யவும் நீங்கள் ஒழுக்கமுடன் வாழவும் ஆவியியின் தூண்டுதல் உங்களுக்கு இன்று கிடைக்கப்பெறுகின்றது.
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பேசாலை பங்கைச்சார்ந்த 67 இளைஞர் யுவதிகளுக்கு உறுதிப்பூசுதல்....(முழுமையான படங்களுடன்)
Reviewed by Author
on
February 08, 2016
Rating:
Reviewed by Author
on
February 08, 2016
Rating:

















No comments:
Post a Comment