மன்னாரில் மாற்றாற்றல் கொண்ட சுய தொழில் பயிற்சியாளர்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.(படங்கள் இணைப்பு)
மன்னாரில் உள்ள மாற்றாற்றல் கொண்டவர்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் வகையில் 'திரிசவிய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சமூக சேவைகள் அமைச்சும் மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கமும் இணைந்து நடத்திய சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்ய 60 பயிற்சியாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட 60 சுய தொழிற்பயிற்சியாளர்கள் தமது சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்துள்ள நிலையில் அவர்களின் சுய தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியாக சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
-குறிப்பாக மெழுகுவர்த்தி தயாரித்தல்,பூ நூல் தயாரித்தல்,ஊதுபத்தி தயாரித்தல் போன்ற மூன்று சுய தொழில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலே குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற சுய தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ.வசந்தகுமார், மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் பணிப்பாளர் அருட்சகோதரி சோசப்பின் மேல்,மற்றும் சமூக சேவை உத்தியோகஸ்தர் எம்.எஸ்.சந்திரபோஸ்,சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எப்.ஜே.செரின்,சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஜே.ஒஸ்மன் ஆகியோர் கலந்து கொண்டு சுய தொழில் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்
(8-2-2016)
-கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட 60 சுய தொழிற்பயிற்சியாளர்கள் தமது சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்துள்ள நிலையில் அவர்களின் சுய தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியாக சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
-குறிப்பாக மெழுகுவர்த்தி தயாரித்தல்,பூ நூல் தயாரித்தல்,ஊதுபத்தி தயாரித்தல் போன்ற மூன்று சுய தொழில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலே குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற சுய தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ.வசந்தகுமார், மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் பணிப்பாளர் அருட்சகோதரி சோசப்பின் மேல்,மற்றும் சமூக சேவை உத்தியோகஸ்தர் எம்.எஸ்.சந்திரபோஸ்,சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எப்.ஜே.செரின்,சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஜே.ஒஸ்மன் ஆகியோர் கலந்து கொண்டு சுய தொழில் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்
(8-2-2016)
மன்னாரில் மாற்றாற்றல் கொண்ட சுய தொழில் பயிற்சியாளர்களுக்கு சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
February 08, 2016
Rating:

No comments:
Post a Comment