மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப்போட்டி-Photos
அந்தோனியார்புரம் சென் அன்ரனிஸ் சம்பியனாகியது
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் 2015,2016 ம் ஆண்டிற்கான 'A' Division ( 1ம் தர ) அணிகளுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றின் இறுதிப் போட்டி 31.01.2016 மாலை 3.30 மணியளவில் தாழ்வுபாடு ஆயர் ஜோசப் மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விறுதிப்போட்டியில் மன்னார் ஜோசவ்வாஸ் நகர் யுனைற்றட் விகவும்  மன்னார் அந்தோனியார்புரம் சென் அன்ரனிஸ் வி க வும் மோதின. ஆட்டத்தின்தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பான முறையில் இரு அணிகளும் மோதின.
இருந்தும் அந்தோனியார்புரம் சென் அன்ரனிஸ் வி க 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.
ஆட்டத்தின் முதல் 15 நிமிடத்தை தன் வசம் வைத்திருந்த யுனைற்றட் வி க வினரின் ஆட்டத்தைமுறியடித்து சென் அன்ரனிஸ் வி க முன்னணி வீரர் இராயப்பர் 28வது நிமிடத்தில் 1வது கோலைப் போட்டு ஆட்டத்தை தம் வசம் வைக்க முயற்சித்தனர். இடைவேளையின்போது 1-0 என்ற நிலையில் இருக்க  மீண்டும் இரண்டாம் பாதி ஆரம்பித்தது. தொடர்ந்து 54வது நிமிடத்தில் மீண்டும் இராயப்பர் தனது அணிக்காக 2வது கோலைப் போட்டு வெற்றியை நோக்கி இட்டுச்சென்றார். பின்னர் 72வது நிமிடத்தில் சென் அன்ரனிஸ் வீரர் சுதர்சன் 3வது கோலைப்போட ஆட்டம் முழுமையாக சென் அன்ரனிஸ் வி க வின் பக்கம் திரும்பியது.  இருந்தும் யுனைற்றட் வி க கடுமையாக போராடியும் கோலைப்போட முடியாமல் ஆட்டம் 3-0 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது. யுனைற்றட் வி க வினர் பல இலகுவாக கோல் பெறும் சந்தர்ப்பங்களை நழுவவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் ஆட்ட நாகனாக 2 போல்களைப்போட்ட சென் அன்ரனிஸ் வி க வீரர் இராயப்பர் தெரிவுசெய்யப்பட்டார்.
இவ்விறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர்nவைத்தியர் குணசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தாழ்வுபாடு பங்குத்தந்தை அருட்பணி சுகுணராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்து இரு அணிகளுக்கும் வெற்றிக்கிண்ணங்களையும் பணப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்தனர். சுpறந்த வீரருக்கான பரிசை லீக்கின் பயிற்றுநரும் முன்னாள் தேசிய உதைபந்தாட்ட வீரருமான திரு டிகோணி அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
இவர்களுடன் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் தலைவர் திரு ஜெறாட் டேவிட்சன்  செயலாளர் திரு ஞானராஜ்  பொருளாளர் திரு கோல்டன் இஉபசெயலாளர் திரு சுவேந்திரன் உபபொருளாளர் திரு றொணி உள்ளிட்ட பல உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப்போட்டி-Photos
 Reviewed by NEWMANNAR
        on 
        
February 01, 2016
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
February 01, 2016
 
        Rating: 
       
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment