பலாலியின் விமான நிலைய புனரமைப்பிற்கு வட மாகாண முதல்வர் எதிர்ப்பு!
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பலாலி விமானநிலையத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்ணேஸ்வரன் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
குறித்த விமான நிலையத்தின் புனரமைப்பின் போது நிலத்தின் அளவானது விரிவாக்கப்படும். அவ்வாறு விரிவாக்கப்பட்டால் பொதுமக்களின் நிலங்கள் அபகரிக்கும் நிலை உருவாகும், இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோருடன் பேச்சு வார்த்ததையில் ஈடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விமான நிலையம் புனரமைப்பு செய்ய தெரிவு செய்யபட்டுள்ள இடமானது மீனவர்கள் பயன்படுத்தும் இடம் என்பதால் இந்தப் பகுதி மீனவர்களுக்கும் இதனால் பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்ணேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலாலியின் விமான நிலைய புனரமைப்பிற்கு வட மாகாண முதல்வர் எதிர்ப்பு!
Reviewed by NEWMANNAR
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment