செவ்வாய்க் கிரகத்தில் எகிப்திய மம்மிகள்?
செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் தோன்றும் தோற்றப்பாடுளை அவதானித்த விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதில் ஆர்வமுடையவர்கள் அதில் கடவுளின் முகம், எலியின் உருவம் மற்றும் பிராணியொன்றின் தோற்றம் என்பன தெரிவதாக கடந்த காலங்களில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக வெளியாகிய தோற்றப்பாடொன்றை அவதானித்த விண்வெளி ஆர்வலர்கள், அது வேற்றுக்கிரகவாசிகளின் மயானம் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிரகத்தின் மேற்படி புகைப்படத்தில் எகிப்திய மம்மியை ஒத்த கட்டமைப்பு காணப்படுவதாக அவர்கள் வாதிடுகின்றனர். அதேசமயம் வேறு சில ஆர்வலர்கள் அந்தப் புகைப்படத்தில் செவ்வாய்க் கிரகவாசியொருவரது என நம்பப்படும் உருவச்சிலை காணப்படுவதாக கூறுகின்றனர்.
இந்தக் கருத்துகள் தொடர்பில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இவை செவ்வாய்க் கிரகத்திலுள்ள பாறைகள் தொடர்பான அவர்களது வெறும் கற்பனைத் தோற்றங்கள் என தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்க் கிரகத்தில் எகிப்திய மம்மிகள்?
Reviewed by NEWMANNAR
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment