முதன்முறையாக லா லிகா லீக்கின் மாதத்தின் சிறந்த விருதை வென்றார் -மெஸ்சி
ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளில் முக்கியமான அணி பார்சிலோனா. இந்த அணிக்காக அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி விளையாடி வருகிறார். இவருடன் நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகியோர் இணைந்து விளையாடுகிறார்கள்.
இந்த மும்மூர்த்திகளால் பார்சிலோனா வரிசையாக வெற்றி பெற்று வருகிறது. பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி பல்வேறு விருதுகளை குவித்து வருகிறார். ஆனால், லா லிகா தொடரின் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இதுவரை வென்றதில்லை.
இந்நிலையில் ஜனவரி மாத்திற்கான விருதை தற்போது மெஸ்சி வென்றுள்ளார். இதற்கு முன் பார்சிலோனாவின் நெய்மர் இந்த விருதை நவம்பர் மாதம் பெற்றிருந்தார். ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரெனால்டோ 2013-ல் இருந்து இதுவரை இரண்டு முறை இவ்விருதை பெற்றுள்ளார்.
28 வயதாகும் மெஸ்சி, கிரானாடா அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார். அத்துடன் அத்லெடிக் பில்பாயோ, மலாகா மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கெதிராக பார்சிலோனா வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார். இந்த லா லிகா சீசனில் 12 கோல்கள் அடித்துள்ளார்.
முதன்முறையாக லா லிகா லீக்கின் மாதத்தின் சிறந்த விருதை வென்றார் -மெஸ்சி
Reviewed by Author
on
February 14, 2016
Rating:
Reviewed by Author
on
February 14, 2016
Rating:


No comments:
Post a Comment