பயங்கரம் பெற்ற மகளையே கற்பழிக்க சொன்ன கும்பல்! மனித உரிமை அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை...
கென்யாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பின் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் சந்தித்த கொடுமைகள் குறித்து மனித உரிமை அமைப்பு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கென்யாவில் பெண்களை பலாத்காரம் செய்வது என்பது அன்றாடம் நடக்கும் விடயங்களில் ஒன்றாகிவிட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற Mwai Kibaki- யின் ஆட்சி காலத்தில் வன்முறைகள் குறையவில்லை.
பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் என குறைந்தது, 900 பேராவது வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த வன்கொடுமைகளுக்கு முழுமையான நீதியை அரசாங்கம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் கென்யாவில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற Uhuru Kenyatta, தற்போது ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், சமூக பிரச்சனைகள், பொருளாத நிலை, உடல், மனரீதியான பிரச்சனைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் போன்றவற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், அதிர்ச்சியூட்டும் விடயமாக, காமவெறி கொண்ட கும்பல் ஒன்று, பெற்ற மகளை கற்பழிக்குமாறு தந்தையை வற்புறுத்தியுள்ளது, இதற்கு தந்தை மறுத்துவிட்டதால், அந்த கும்பலானது தந்தையை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, தந்தையான Joseph.N(82) கூறியதாவது, கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி இளம் ஆண்கள் அடங்கிய 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று எனது கண்ணெதிரிலேயே இரண்டு மகள்களையும் பலமுறை கற்பழித்தனர்.
அவர்கள் நடத்திய வெறியாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு என்னையும் அழைத்தனர், இதற்கு நான் மறுத்துவிடவே, உலோக பட்டை கொண்டு என்னை தாக்கினர், இதில் எனது தாடையில் பலத்த காயம் ஏற்பட்டு, பற்கள் அனைத்தும் ஒன்றன் பின்ன ஒன்றாக கொட்ட ஆரம்பித்தன.
எனது மகள்களை நான் பலாத்காரம் செய்ய மறுத்துவிட்டதால், அவர்கள் என்னை ஓரினச்சேர்க்கையாளராக பயன்படுத்திக்கொண்டனர்.
இதில், எனது மகள் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட நபரால் பலாத்காரம் செய்யப்பட்டதால் யூன் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார், மற்றொரு மகள் விஷம் தோய்த்த அம்பு தாக்கப்பட்டதால் ஒரு காலினை இழந்தார்.
பின்னர், அதன் தாக்கத்தால் மே மாதம் 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்று சோகம் கலந்த மனதோடு பேசியுள்ளார்.
மேலும், அங்குள்ள மக்களிடம் பேட்டி எடுத்த போது, 163 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் பலமுறை பலநபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வன்முறையில் ஈடுபடுவர்கள் அதிகமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துப்பாக்கிகள், பாட்டில்கள் மற்றும் பைப்புகைளை வைத்து மிரட்டி இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.



பயங்கரம் பெற்ற மகளையே கற்பழிக்க சொன்ன கும்பல்! மனித உரிமை அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை...
Reviewed by Author
on
February 22, 2016
Rating:

No comments:
Post a Comment