மன்னார் பள்ளிமுனை தேசிய வீரர்கள் எடிசன் மற்றும் கொட்வின் கிராம மக்களால் கெளரவிக்கப்பட்டார்கள்-முழுமையான படங்கள் இணைப்பு
இலங்கை உதைபந்தாட்ட தேசிய அணியில் விளையாடும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளிமுனை சென் லூசியா விளையாட்டு கழக வீரர்கள் எடிசன் மற்றும் கொட்வின் பள்ளிமுனை கிராம மக்களால் சிறப்பாக வரவேற்கப்பட்டு சென் லூசியா பாடசாலை கேட்போர் மண்டபதில் இன்று 05-02-2016 மாலை 6-00 மணியளவில் பாடசாலை சமூகத்தினராலும் ஊர்மக்கள் அருட்தந்தை ஸ்ரிபன் ராஜ் பங்கு தந்தை அவர்களோடு மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் கௌரவ அல் ஹாஜ் S.H.M. ஹரீஸ், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் கௌரவ அல் ஹாஜ் K.காதர் மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல் ஹாஜ் M.B.பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.வடமாகாணத்தில் இருந்து மூன்று வீரர்களில் 02 எமது மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை கிராமத்தினை சேர்ந்தவர்கள் தேசிய அணியில் இடம் பிடித்து பலசதனைகள் புரிந்து விளையாடி வரும் எடிசன் மற்றும் கொட்வின் இருவரையும் மனதார பாரட்டுகிரோம் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் என நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் மக்கள் அனைவரும் பாராட்டினார்கள்.
தேசிய வீரர்களான எடிசன் மற்றும் கொட்வின் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்கள். ஊர்மக்களாள் வழங்கிவைத்த நினைவு சின்னத்தை வழங்கி வைத்த விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் கௌரவ அல் ஹாஜ் S.H.M. ஹரீஸ் அவர்கள் தனதுரையில் நானும் வடகிழக்கை சார்ந்தவன் என்ற முறையில் மிகவும் பெருமை கொள்கிறேன்.
இந்த இருவரினதும் திறமை போன்று இன்னும் பல வீர்ர்கள் உருவாக வேண்டும் அதற்கு நானும் வட மாகாண மற்றம் கிழக்கு மாகாண அமைச்சர்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள் உதவுவார்கள் ஒன்றினைந்து இழந்ததை மீட்டு எடுப்போம். அது கல்வியாலும் விளையாட்டாலும் மனதைரியத்தினாலும் தான் முடியம் என்றார்.
நீயூ மன்னார் இணையமும் இவர்களை வாழ்தி நிற்கின்றது
மேலதிக விபரங்களுக்கு.......கிளிக்
http://www.newmannar.com/2016/01/201627.html
மன்னார் பள்ளிமுனை தேசிய வீரர்கள் எடிசன் மற்றும் கொட்வின் கிராம மக்களால் கெளரவிக்கப்பட்டார்கள்-முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
February 05, 2016
Rating:
Reviewed by Author
on
February 05, 2016
Rating:

No comments:
Post a Comment