விபரீதம் ...முன்னாள் மல்யுத்த வீரர் கிரேட் காளி மருத்துவமனையில் அனுமதி: போட்டியின் போது நிகழ்ந்த விபரீதம்,,,,
இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரரான தி கிரேட் காளி போட்டி ஒன்றின் போது பலத்த காயமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரரான தலிப் சிங் ராணா எனப்படும் தி கிரேட் காளி WWE போன்ற போட்டிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர்
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானியில் நேற்று முன் தினம் நடைபெற்ற மல்யுத்த போட்டி ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது கனடா நாட்டை சேர்ந்த 3 போட்டியாளர்களுடன் அவர் மோதினார்.
அப்போது சக போட்டியாளர்கள் அவரை நாற்காலி மூலம் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது.
பின்னர் வீடு திரும்பிய அவர் மேல் சிகிச்சைக்காக டெஹ்ராடூனில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
விபரீதம் ...முன்னாள் மல்யுத்த வீரர் கிரேட் காளி மருத்துவமனையில் அனுமதி: போட்டியின் போது நிகழ்ந்த விபரீதம்,,,,
Reviewed by Author
on
February 27, 2016
Rating:

No comments:
Post a Comment