ஐந்து வயது சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சியளித்த மெஸ்ஸி

ஆப்கானிஸ்தானின் காபூல் அருகே உள்ள ஜகோரி கிராமத்தை சேர்ந்த அகமது என்ற 5 வயது சிறுவன் கால்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் வைத்துள்ளார்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியை சேர்ந்த மெஸ்ஸியின் தீவிர ரசிகரான அகமதுக்கு மெஸ்ஸியின் ஜெர்ஸியை வாங்கித்தர அவனது தந்தையால் இயலவில்லை.
ஆர்வ மிகுதியில், மெஸ்ஸியின் சீருடையில் உள்ள வடிவத்தைக் கொண்ட பிளாஸ்டிக் பையை சிறுவன் முர்தசா அகமதி அணிந்திருந்த புகைப்படம் உலகம் முழுவதும் இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
இது மெஸ்ஸிக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆப்கன் சிறுவன் அகமதிக்கு, மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட ஜெர்ஸியை அனுப்பியுள்ளார்.
அந்தச் சட்டையுடன் ஒரு கால்பந்தையும் அனுப்பியுள்ளார். மெஸ்ஸியின் இந்த செயல் சிறுவன் அகமதை இன்பத்தில் திக்குமுக்காட செய்துள்ளது.
மெஸ்ஸி அனுப்பிய சட்டையுடன் அகமதி இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும், எப்படியாவது சிறுவனை மெஸ்ஸியை சந்திக்க வைக்க வேண்டும் என அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐந்து வயது சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சியளித்த மெஸ்ஸி
Reviewed by Author
on
February 27, 2016
Rating:

No comments:
Post a Comment