மன்னார் கவிஞர் ந.பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதைத்தொகுப்பு நூல்வெளியீடு இன்று 28-02-2016----- முழுமையான படங்களுடன்
மன்னார் தமிழ்ச்சங்கம் வெளியீடு செய்த கவிஞர் ந.பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதைத்தொகுப்பு நூல்வெளியீடு இன்று 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10-30 மணியளவில் பிரம்மஸ்ரீ மஹாதர்மகுமார சர்மா குருக்கள் தலைமையில் வெகுசிறப்பாக இடம் பெற்றது,
விருந்தினர்கள் வரவேற்புடன் மங்கள விளக்கேற்றல் தமிழ்தாய்வாழ்த்து இசைக்கப்பட்து நிகழ்வு ஆரம்பமானது
இந்நிகழ்வில்……
பிரதம விருந்தினராக
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வன்னி மாவட்டம்
விசேட விருந்தினராக
திருமதி.ஏ.ஸ்ரான்லி டி மெல் மேலதிக அரசாங்க அதிபர்
சிறப்பு விருந்தினர்கள்.....
கே.எஸ்.வசந்த குமார் பிரதேச செயலாளர் மன்னார் மாவட்டம்
அருட்பணி தமிழ் நேசன் அடிகளார் இயக்குநர் கலையருவி
வினோ.நோகராதலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
கௌரவ விருந்தினர்கள்.......
வைத்தியகலாநிதி.எஸ்.செல்வமகேந்திரன் சுவர்ணா வைத்தியசாலை
வைத்தியகலாநிதி.செ.லோகநாதன் மரகதம் வைத்தியசாலை
சிறப்பு பிரதி பெற்றவர்கள்…
திரு.பெ.சிவபிரபு-ஜயப்பன்யாத்திரிகள் குழாம்
திரு.கணேசமூர்த்தி கவி றேடர்ஸ் மன்னார்
திரு.யோநாதன் மலர் ஸ்ரோர்ஸ் மன்னார்
இவர்களுடன் கிளிநொச்சி-முல்லைத்தீவு-அம்பாறை-திருகோணமலை-மட்டக்களப்பு-போன்ற மாவட்டங்களில் இருந்து கவிஞர்கள் கலைஞர்கள் கலந்துகொண்டனர் அத்தோடு மன்னார் மாவட்டத்தில் இருந்தும் கவிஞர்கள் கலைஞர்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக ........
கவிஞர் ந.பிரதீப் அவர்களின் இரவல் தேசம் கவிதை தொகுப்பானது தமிழ் மக்களின் வாழ்வியலை கடந்து வந்த பாதையினை தெளிவாக முறையாக காட்டி நிற்கின்றது தற்காலத்தில் இப்படியான படைப்புக்கள் தேவையில்லாததொரு விடையமாக இருந்தாலும் காலம்கடந்து செல்கின்ற போது இவ்வாறான படைப்புக்கள் எமது வாழ்வை எடுத்துச்சொல்லுகின்ற சான்றாக என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஜயமில்லை
64 பக்கத்தில் 23 அழகான கவிதையினை உள்ளடக்கிய அருமையான படைப்பு ந.பிரதீப் அவர்களின் இரவல் தேசம் எல்லோரும் வாங்கி படித்து கலையை வாழவைக்கனும் கவிஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும் இக்கலைஞனை நியூமன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.
நிகழ்ச்சி தொகுப்பு-ர.கார்த்தீபன்
நூலாய்வினை கவிஞர்.வே.முல்லைத்தீபன் வழங்கினார்.....
ஏற்புரையில் கவிஞர் தான் கடந்து வந்த பாதையின் வலிகளை தெளிவுபடுத்தினார் அனைவருக்கும் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்தார்.......
மன்னார் கவிஞர் ந.பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதைத்தொகுப்பு நூல்வெளியீடு இன்று 28-02-2016----- முழுமையான படங்களுடன்
Reviewed by Author
on
February 28, 2016
Rating:
No comments:
Post a Comment