அமெரிக்க வாஷிங்டனை ஆளப்போகும் தமிழரின்,,,,
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த 9 பேரில் ஒருவர், அண்மையில் இறந்து விட, அந்த இடத்தில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்படவுள்ளார்.
அமெரிக்காவின் கொலம்பியாவில் உள்ள அப்பீல்ஸ் நீதிமன்றத்தில், தற்போது 48 வயதாகும் ஸ்ரீநிவாசன் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாக கருதப்படும் இங்கிருந்துதான்,
அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவது வழக்கம். எனவே ஸ்ரீநிவாசனுக்குதான் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதுவும் அதிபர் பரிந்துரைத்து விட்டால் செனட் சபை அதனை நிராகரித்து விட முடியாது. ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். எனவே ஸ்ரீனிவாசனின் நியமனம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.
ஒபாமா தனது பதவி காலத்தில், ஏற்கனவே 2 உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவியில் அமர்த்தி விட்டார். தற்போது ஸ்ரீநிவாசனை 3-வது உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பரிந்துரைக்கிறார். அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிக்கு ஓய்வு வயது வரம்பு கிடையாது. ஆயுட் காலம் முழுவதும் பணியில் இருக்கலாம்.
ஸ்ரீநிவாசனின் பூர்வீகம், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரம் ஆகும். ஸ்ரீனிவாசனின் தந்தையான பத்மநாபன் ஸ்ரீகாந்த், மேல திருவேங்கடநாதபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். பணிநிமித்தமாக பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. சண்டிகரில்தான் ஸ்ரீநிவாசன் பிறந்துள்ளார்.
கணித பேராசிரியரான இவரது தந்தை பத்மநாபனுக்கு, கன்சாஸ் சிட்டி பல்கலையில் பணி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குடும்பம் அமெரிக்கா சென்று குடியேறியது. இவரது தாயார் சரோஜாவும் இதே பல்கலைக்கழகத்தில்தான் கணிணித் துறை பேராசிரியராக பணியாற்றினார். ஸ்ரீநிவாசன் ஸ்டான்போர்ட் பல்கலையில் சட்ட படிப்பு படித்தார்.
கடந்த 1995-ம் ஆண்டு ஸ்டேன்போர்ட் ஸ்கூல் ஆப் பிசினசில் மேற்படிப்பு படித்தார். ஹார்வர்ட் பல்கலையிலும் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உண்டு. அமெரிக்க அரசின் முதன்மை துணை சொலிசிட்டர் ஜெனராலாகவும் இருந்துள்ளார். ஸ்ரீநிவாசன் சிறந்த கூடைப்பந்து வீரரும் கூட. இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
அமெரிக்க வாஷிங்டனை ஆளப்போகும் தமிழரின்,,,,
Reviewed by Author
on
February 15, 2016
Rating:
Reviewed by Author
on
February 15, 2016
Rating:


No comments:
Post a Comment