ஆவா குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு! மூவர் கைது; காயத்துடன் ஒருவர் தப்பியோட்டம்
வாள்கள், கத்திகளுடன் முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களுடன் யாழ்ப்பாணம் -இணுவிலில் நின்ற 'ஆவா' குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயத்துடன் தப்பித்தார். மூவரை கைது செய்து கொண்டு சென்றனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இணுவில் காரைக்கால் சிவன் கோயில் பகுதியில் நேற்று மதியமளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் அச்சுறுத்தும் விதத்தில் இளைஞர் குழு ஒன்று ஆயுதங்களுடன் நடமாடுவதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு சிலர் தகவல் அளித்துள்ளனர். அப்பகுதிக்கு விரைந்த பொலிஸாரை கண்டதும் இளைஞர் குழு ஓட முற்பட்டுள்ளது. இதனால் பொலிஸார் ஒருவரை துப்பாக்கியால் சுடவே அவர் காயமடைந்து வீழ்ந்துள்ளார்.
பொலிஸார் அவரை விட்டுவிட்டு மற்றவர்களைக் கைது செய்ய முற்படவே, சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அவர் தப்பிச் சென்றுள்ளார். மூவரைப் பொலிஸார் கைது செய்து கொண்டு சென்றனர் எனத் தெரியவருகின்றது. எனினும் சம்பவம் தொடர்பில் தகவல் அளிக்கப் பொலிஸார் மறுத்து விட்டனர்.
ஆவா குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு! மூவர் கைது; காயத்துடன் ஒருவர் தப்பியோட்டம்
Reviewed by NEWMANNAR
on
February 22, 2016
Rating:

No comments:
Post a Comment