மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த திமோத்தி நிதுர்ஷன்
இந்தியாவில் நடைபெற்றுவரும் 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG South Asian Games) இலங்கை கூடைப்பந்தாட்ட அணியில் மட்டக்களப்பைச் சேர்ந்த தினேஷ் காந்த் திமோத்தி நிதுர்ஷன் இடம்பிடித்துள்ளார்.
இதன் மூலம் மட்டக்களப்பு மண்ணிலிருந்து தெற்காசிய விளையாட்டு விழாவொன்றில் பங்குபற்றும் முதலாவது வீரர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
மட்டக்களப்பு சின்ன உப்போடையை பிறப்பிடமாகக்கொண்ட 24 வயதுடைய திமோத்தி நிதுர்ஷன் தனது ஆரம்பக் கல்வியை மட்/ கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மட்/ புனித மிக்கேல் கல்லூரியிலும் பயின்றார்.
பாடசாலை, வலய, கோட்ட, மாகாண மட்ட போட்டிகளில் பங்குபற்றி பல பதக்கங்களை வென்றுள்ள இவர், இலங்கை தேசிய அணியிலும் சிறப்பாக விளையாடி மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்க்கிறார்.
இவர், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்மேளன போட்டிகளில் இல ங்கை சார்பாக பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த திமோத்தி நிதுர்ஷன்
Reviewed by Author
on
February 07, 2016
Rating:

No comments:
Post a Comment