இலங்கை - இந்தியாவிற்கு இடையில் இரு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!
இலங்கை மற்றும் இந்தியாவிற்கும் இடையில் இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கை - இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9வது அமர்வுகள் இன்று இடம்பெற்ற நிலையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாதிடப்பட்டுள்ளன.
குறித்த உடன்படிக்கையின் பிரகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், வட மாகாணத்தில் 27 பாடசாலைகளை புனரமைப்பு செய்வதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த, ஒப்பந்தத்தில் இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.பந்துசேன ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக ஒரு சத்திர சிகிச்சைப் பிரிவு நிலையத்தினை அமைப்பது மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவது தொடர்பிலும் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மற்றும் இலங்கைத் தரப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இலங்கை - இந்திய ஆணைக்குழுவின் 8ஆவது அமர்வு 2013ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை - இந்தியாவிற்கு இடையில் இரு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!
Reviewed by Author
on
February 06, 2016
Rating:
No comments:
Post a Comment